சென்னை: உடல்நலம் பாதிப்பு காரணமாக சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று மாலை நல்லநேரமான மாலை மணிக்கு மேல் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ்  ஆனார். அவருக்கு வழிநெடுக திமுக தொண்டர்கள் நின்று வரவேற்பு அளித்தனர்.

வீடு திரும்பிய ஸ்டாலின், நலம்பெற்று வீடு திரும்பினேன்  என்று பதிவிட்டுள்ளார்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நடைபயிற்சி சென்றபோது ஏற்பட்ட திடீர் தலைச்சுற்றல்   காரமா காரணமாக கடந்த 21ந்தேதி  (ஜூலை 21, 2025)  சென்னை கிரிம்ஸ்ரோடு அப்போலோவில் அனுமதிக்கப்பட்டுள்ள இன்று 6வது நாளாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவருக்கு அப்போலோ கேன்சர் மருத்துவமனையிலும் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்ட நிலையில், ஜுலை 24 அன்று அவருக்கு ஆஞ்சியோ சோதனை நடத்தப்பட்டதாக கூறப்பட்டது.  இதய சிகிச்சை மருத்துவர் Dr.G.செங்குட்டுவேலு அவர்களின் தலைமையிலான மருத்துவ வல்லுநர் குழுவின் அறிவுரையின்படி, ஆஞ்சியோகிராம் சோதனை மேற்கொள்ளப்பட்டதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்திருந்தது/ அவரது உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் இருப்பதாகவும்  மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ள நிலையில், முதலமைச்சர் ஸ்டாலின் மருத்துவமனையில் இருந்தே மக்கள் பணியாற்றி வந்தார்.

இதற்கிடையில், பிரதமர் மோடி தமிழ்நாடு வருகை தந்ததால், முதலமைச்சர் சார்பில் கல்வி நிதியை விடுவிக்க வலியுறுத்தி அமைச்சர் தங்கம் தென்னரசு சார்பில் மனு அளிக்க ஏற்பாடு செய்தார். இதைத்தொடர்ந்து மருத்துவமனையில் இருப்பதை விரும்பவில்லை என்று நேற்று கூறியிருந்தார்.

இந்த நிலையில், இன்று மாலை 6 மணிக்கு மேல் அதாவது சுமாலை 6.15மணி அளவில் கிரிம்ஸ் ரோடு அப்போலோவில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீடு திரும்பினார். இதையொட்டி, திமுகவிளர் அவருக்கு வழிநெடுக நின்று வரவேற்பு அளித்தனர்.

முதலமைச்சர் ஸ்டாலின்  3 நாட்களுக்குப் பிறகு வழக்கமான பணிகளை தொடரவும் மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

இந்த நிலையில் வீடு திரும்பிய முதல்வர் ஸ்டாலின்,  நலம்பெற்று வீடு திரும்பினேன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தபோது அக்கறையுடன் விசாரித்து, நலம் பெற வாழ்த்திய அனைத்து அரசியல் இயக்கத் தலைவர்கள் – மக்கள் பிரதிநிதிகள் – நீதியரசர்கள் – அரசு அதிகாரிகள் – திரைக் கலைஞர்கள் – என் உயிரோடு கலந்திருக்கும் தலைவர் கலைஞரின் அன்பு உடன்பிறப்புகள் உள்ளிட்ட தமிழ்நாட்டு மக்கள் அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றி! மருத்துவமனையில் சிறப்பான சிகிச்சையளித்து, நான் விரைந்து நலம்பெற உறுதுணையாய் இருந்த மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் மீண்டும் அன்பும், நன்றியும்! உங்களுக்காக உழைப்பை வழங்கும் என் கடமையை என்றும் தொடர்வேன்!

என்று தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.