திருலோக்கி அகிலாண் டேஸ்வரி சமேத சுந்தரேஸ்வர சுவாமி திருக்கோவில்

கருங் கல்லாலான நந்தியின் மேல் ஒரு பீடத்தில், சிவம் தழுவிய சக்தியாக, சக்தி தழுவிய சிவமாக காட்சி யளிக்கும் அரிய கருங்கற்திருமேனியான இது, வேறெங்கும் காணமுடியாத அபூர்வ படைப்பாகும்.
ஒரே கல்லினால் ஆன அபூர்வ ரிஷபாரூடர் சிற்பத்தைக் கொண்டது மான சிறப்புமிக்க தலமாக விளங்குகிறது,
தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள திருலோக்கி அகிலாண் டேஸ்வரி சமேத சுந்தரேஸ்வர சுவாமி திருக்கோவில்.
குரு பகவானுக்கு பாப விமோசனம் அளித்ததும், திரு விசைப்பா பாடலில் இடம் பெற்றதும், தேவார வைப்புத் தலங்களில் ஒன்றானது.
குரு பகவானின் பாவங்களை போக்கிய, திருலோக்கி அகிலாண் டேஸ்வரி சமேத சுந்தரேஸ்வர சுவாமி ஆலயம். முற்காலத்தில் ஏமநல்லூர் என்று அழைக்கப் பட்ட இத்தலம், தேவார வைப்புத் தலங்களில் ஒன்றாகத் திகழ்கிறது.
அப்பர் பெருமான் ‘ஏமநல்லூர்’ என தன் சேத்திரக் கோவையில் இவ்வூரை குறிப் பிட்டுள்ளார்.
பிருகு முனிவர், தேவ குருவான பிரஹஸ்பதி மற்றும் சுகேது ஆகியோர் இவ்வாலய இறைவனை வழி பட்டுள்ளனர். திருக் குறுக்கை திருத்தலத்தில் சிவனின் நெற்றிக் கண்ணால் எரிக்கப்பட்ட மன்மதனை, அவனது மனைவி ரதிதேவியின் வேண்டுதலின் பேரில் சிவன் உயிர்ப்பித்து அளித்த சிறப்புக் குரிய தலம் இதுவாகும். இத்தல இறைவன் ‘சுந்தரேஸ் வரர்’. இறைவியின் திருநாமம் ‘அகிலாண்டேஸ்வரி.’ தலவிருட்சம் சரக் கொன்றை. தீர்த்தம் – லட்சுமி தீர்த்தம்.
ஒருசமயம் குரு பகவான், தன்னை அறியாது செய்த பாவங்களுக்கு விமோசனம் வேண்டி ஆலய தரிசனத்தை மேற் கொண்டு பல தலங்களை தரிசித்து வந்தார். ‘மத்தியார்ச் சுனம்’ எனப்படும் திருவிடை மருதூருக்கு வருகை தந்து, அங்குள்ள மகாலிங்க சுவாமியை வழிபட்டார். குரு பகவானுக்கு அருள்பாலித்த மகாலிங்க சுவாமி, “எனக்கு கிழக்கு திசையில் அமர்ந்து அருள்பாலித்து வரும் சுந்தரேஸ்வர பெருமானை வழிபட்டால், உம்மை பிடித்த பாவங்கள் விலகி விமோசனம் கிடைக்கும்” எனப் பணித்தார்.
சுந்தரேஸ்வரப் பெருமான், தேவர்களும் பூதகணங் களும் புடைசூழ, ரிஷப வாகனத்தில் அன்னை அகிலாண் டேஸ் வரியை ஆலிங்கனம் செய்தவாறு குரு பகவானுக்கு காட்சிதந்தார்.
மன்மதன் உயிர்பெற்ற வரலாறு
அட்டவீரட்டத் தலங்களில் ஒன்றான கொற்கை எனப்படும் திருக் குறுக்கை திருத் தலத்தில், சிவபெரு மானின் நெற்றிக் கண்ணால் எரிக்கப் பட்டான், காமத்தின் கடவுளாக பாவிக்கப்படும் மன்மதன். அவனது பிழையைப் பொறுத்து, மீண்டும் அவனுக்கு உயிர்பிச்சை அளிக்கும்படி, சிவபெரு மானை ரதிதேவி வேண்டினாள்.
“இந்த கோவிலில் சிவனை சவணங்கி வழிபட, உன் கணவன் உயிர்பெற்று வருவான்” என சிவன் வரமளித்தார். அதன் பொருட்டு இத்தலம் வந்த ரதிதேவி, இங்குள்ள இறைவனை வணங்கி வழிபட இறை யருளால் மன்மதன் உயிர் பெற்றான்.
குரு பகவானுக்கு ரிஷப வாகனத்தில் காட்சி யளித்த உமா மகேஸ்வர வடிவம், மிகமிக அற்புதமான சிற்ப வடிவமாகும். கருங் கல்லாலான நந்தியின் மேல் ஒரு பீடத்தில், சிவம் தழுவிய சக்தியாக, சக்தி தழுவிய சிவமாக காட்சி யளிக்கும் அரிய கருங்கற் திருமேனி யான இது, வேறெங்கும் காணமுடியாத அபூர்வ படைப்பாகும்.
இரு கரங்களில் சூலம், மான் ஏந்தியும், முன் வலது கரம் அபய முத்திரை யுடனும், இடது கரம் அம்பிகையை அணைத்தும் அழகு வடிவத்தில் சிவபெருமான் வலது காலைத் தொங்கவிட்டு இடது காலை மடக்கி அமர்ந் துள்ளார். அம்பிகையும் அவருக்கு ஈடுகொடுத்து இடது காலை மடக்கியும் வலது காலை சாய்த்துத் தொங்க விட்டும் உடம்பை வளைத்தவாறு ஒய்யாரமாக அமர்ந் திருக்கும் எழில் வடிவத்தை எவ்வளவு நேரம் வேண்டு மானாலும் பார்த்துக் கொண்டே இருக்கலாம்.
இவ்வாலயம் தஞ்சாவூர் மாவட்டம் திருவிடை மருதூர் வட்டத்தில் திருப்பனந் தாளில் இருந்து 5 கிலோமீட்டர் தொலை விலும், மயிலாடுதுறை மற்றும் கும்பகோணத்தில் இருந்து 30 கிலோமீட்டர் தூரத்திலும் அமைந் துள்ளது. மேற்கண்ட ஊர்களில் இருந்து ஏராளமான பஸ் வசதிகளும் உள்ளன