தூத்துக்குடி

பிரதமர் மோடி தனக்கு இந்த புண்ணிய பூமியில் கால் பதிக்கும் பாக்கியம் கிடைத்துள்ளதாக உற்சாகத்துடன் தெரிவித்துள்ளார்,

நேற்று தூத்துக்குடி விமான நிலைய வளாகத்தில் நடைபெற்ற பிரம்மாண்ட விழாவில் பங்கேற்ற பிரதமர் நரேந்திர மோடி, ரூ.4,900 கோடி மதிப்பிலான பல்வேறு திட்டப் பணிகளைத் தொடங்கி வைத்தார்.

விழாவில் பிரதமர் மோடி

“வணக்கம்”.

இன்று கார்கில் வெற்றித்திருநாள். நாட்டிற்காக உயிர் தியாகம் செய்த வீரர்களுக்குத் தலை வணங்குகிறேன், எ நாட்டின் பாதுகாப்புக்காக இன்னுயிர் நீத்த வீரர்களின் தியாகத்தை நினைவு கூர்கிறெஏன்

மேலும் 4 நாட்கள் வெளிநாடு சுற்றுப்பயணத்திற்குப் பிறகு இந்த புண்ணிய பூமியில் கால் பதிக்கும் பாக்கியம் எனக்கு கிடைத்துள்ளது,.

திருச்செந்தூர் முருகன், ராமேஸ்வரம் சிவன் ஆசீர்வாதத்துடன் தமிழகத்தின் திட்டங்களைத் தொடங்கி வைத்துள்ளேன்,”

என்று உரையாற்றி உள்ளார்..