தேவிகருமாரியம்மன் திருக்கோயில், வ.உ.சி.வளாகம், கிரே டவுன், கோயம்புத்தூர்.

தல சிறப்பு :

இங்குள்ள கருமாரியம்மன் சுயம்புவாக உருவானவர்.

பொது தகவல் :

கருமாரியம்மன் சன்னிதி கிழக்கு முகமாக உள்ளது. வேதபுரீஸ்வரர் சன்னிதி மேற்கு முகமாக வில்வமரத்தடியில் உள்ளது. தட்சிணாமூர்த்தி நான்கு ரிஷிகம் தெற்கு முகமாக அமைந்துள்ளது. துர்க்கை வடக்கு பார்த்து உள்ளது. ராகுகேது உள்ளது. விநாயகர் முருகன் கிழக்கு பார்த்து அமைந்துள்ளது. பஞ்சமுக ஆஞ்சநேயர் வடக்கு முகமாக உள்ளது.

பிரார்த்தனை :

திருமணம் தடை நீங்கும் திருத்தலம், குழந்தை செல்வம் கிடைக்க ராகு வழிபாடு, சகல செல்வத்தையும் தரும் திருத்தலம் என்பதால் இங்கு பிரார்த்திக்கின்றனர்.

நேர்த்திக்கடன் :

வருடந்தோறும் பால்குடம் எடுத்து வருதல், அம்மனுக்கு திருக்கல்யாணம் நடத்துதல், மஹா அபிஷேகம் மற்றும் பொங்கல் வைத்து படைத்து நேர்த்திக்கடனை செலுத்துகின்றனர்.

தலபெருமை :

இத்திருத்தலத்தில் புற்றடி சன்னிதி உள்ளது. சிவபெருமான் மேற்கு பார்த்து அமைந்துள்ளார். இத்திருத்தலத்தில் அம்மன் நித்யகல்யாணி, இங்கு அக்னி சட்டி கிடையாது, இங்கு இரண்டு ஆஞ்சநேயர் உள்ளனர்.

தல வரலாறு :

60 ஆண்டுகளுக்கு முன்பு காலியிடமாக இருந்தது. இந்த இடத்தில் ஏழை எளிய மக்கள் தங்கி இருந்தார்கள். இங்கு தங்கியிருந்தவர் கனவில் சென்று நான் இங்கு கருநாகமாக வருவேன் எனக்கு இங்கு சிலை வைக்க வேண்டும் என்று சொன்ன பிறகு நிலையை வைத்தார்கள். அதன் பின்பு தினந்தோறும் பூஜைகள் நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது மதியம் 12:00 மணியளவில் உச்சிகால பூஜை நடைபெறும் அப்போது நாக பாம்பு அம்மன் சன்னிதிக்கு வந்து செல்லும். இத்திருத்தலத்தில் பண்டைய காலத்தில் மான்கள் சுற்றி திருந்ததால் அதனால் இத்தலத்திற்கு மான்காடு என்று பெயர் பெற்றது. இக்கோயில் 1952ம் ஆண்டு கட்டப்பட்டது.

திருவிழா :

ஆடி திருவிழா, மஹாசிவராத்திரி இங்கு சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.