சென்னை: தமிழ்நாடு அரசின் உதவி செய்தித் தொடர்பாளர்களாக திமுகவினரை நியமிக்க முதல்வர் ஸ்டாலின் தலைமையிலானதிமுக அரசு முயற்சிப்பதாக குற்றம் சாட்டி சென்னை உயர் நீதிமன்றத்தில் அதிமுக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசு இதுவரை இல்லாத முறையில், மூத்த ஐஏஎஸ் அதிகாரி அமுதா உள்பட 4 ஐஏஎஸ் அதிகாரிகளை திடீரென செய்தி தொடர்பாளர்களாக நியமனம் செய்துள்ளது. இது விமர்சனங்களை ஏற்படுத்தி உள்ளது.

இந்த நிலையில், தமிழ்நாடு அரசின் உதவி செய்தித் தொடர்பாளர்களை (APRO Post) அரசு தரப்பில் நேரடியாக நியமனம் செய்ய உள்ளதாகவும், இந்த பணிகளில் திமுகவினரை நியமனம் செய்யும் வகையில் நடவடிக்கை எடுத்து வருவதாகவும் அதிமுக குற்றம் சாட்டி உள்ளது.
ஏற்கனவே கடந்த 2022ம் ஆண்டு ஏபிஆர்ஓ பதவிகள் டிஎன்பிஎஸ்சி மூலம் நிரப்பபடும் என அரசாணை வெளியிட்டிருந்த நிலையில், தற்போது திடீரென நேரடியாக நியமனம் செய்ய முனைந்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திமுக அரசு கடந்த 2022-ஆம் ஆண்டு ஏபிஆர்ஓ நேரடி நியமனம் தொடர்பான அரசாணை பிறப்பித்திருந்தது. இதை எதிர்த்து சீனிவாச மாசிலாமணி என்பவர் தாக்கல் செய்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், அரசாணைக்கு தடை விதித்துள்ளது. இந்த நிலையில், தடை மதிக்காமல், திமுக அரசு 2026 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, விதியை மீறி திமுக ஐ.டி.பிரிவைச் சேர்ந்தவர்களை உதவி மக்கள் தொடர்பு அதிகாரிகளாக நியமிக்க முயற்சித்து வருவதாக கூறப்படுகிறது.
இதுதொடர்பாக அதிமுக வழக்கறிஞர் அணி செயலாளர் இன்பதுரை சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருக்கிறார்.
அவரது மனுவில், தமிழ்நாட அரசு, உதவி செய்தித் தொடர்பாளர்கள் நியமனம் தொடர்பாக எந்தவித பொது அறிவிப்பு வெளியிடாமல், எழுத்துத் தேர்வு நடத்தாமல், பெயரளவில் விண்ணப்பங்களை வரவேற்று விட்டு, அந்த பதவிகளில் திமுக ஐ.டி. விங் நிர்வாகிகளை நியமிக்க அரசு முடிவு செய்துள்ளது. இது, உயர் நீதிமன்ற உத்தரவுக்கு விரோதமானது என்றும், இந்த நியமனத்தை அனுமதித்தால், அரசு வேலையை எதிர்பார்த்து காத்திருக்கும் தகுதியானவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும். விதிகளுக்கு முரணாக சட்டவிரோதமாக, உதவி மக்கள் தொடர்பு அதிகாரிகள் நியமனத்தை தடுக்க வேண்டும் என்று கோரியுள்ளது.
அத்துடன், ஏற்கனவே சீனிவாச மாசிலாமணி தாக்கல் செய்த வழக்கில் தன்னையும் ஒரு தரப்பாக சேர்க்க உத்தரவிட வேண்டும் எனக் கோரியுள்ளார்.
இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
முன்னதாக, கடந்த 2022ம் ஆண்டு உயர்நீதிமன்றம் தடையை அடுத்து, தற்போது நேரடியாக நியமனம் செய்யப்படும் செய்தித் தொடர்பாளர்கள் பணியிடங்களை டி.என்.பி.எஸ்.சி. மூலம் நியமனம் செய்யலாம் என்று அரசு முடிவெடுத்து அரசாணையை வெளியிட்டது.
இதுதொடர்பாக தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை செயலாளர் மகேசன் காசிராஜன் வெளியிட்ட அரசாணையில், செய்தி மக்கள் தொடர்புத் துறையில் உள்ள உதவி மக்கள் தொடர்பு அலுவலர் (விளம்பரம்) (ஏ.பி.ஆர்.ஓ.) பணியிடங்கள், தமிழ்நாடு பொது சார்நிலைப் பணித் தொகுதியின் கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ளன. இந்தப் பதவிக்கான பணியிடங்களில், நேரடி நியமனம், பணிமாறுதல் மூலம் நியமனம், பதவி உயர்வின் மூலம் நியமனம் என்ற வகையில் நியமனம் நடைபெறுகிறது. Also Read ஊட்டியில் கடும் பனிமூட்டம் – பொதுமக்கள் அவதி தற்போது நேரடியாக நியமனம் செய்யப்படும் பணியிடங்களை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் நியமனம் செய்யலாம் என்று அரசு முடிவெடுத்து அரசாணையை வெளியிட்டுள்ளது. இந்த பதவியில் சேர அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் பிஏ அல்லது பிஎஸ்சி பட்டத்தை ஜர்னலிசம், மாஸ் கம்யூனிக்கேசன், மலிடி மீடியா, பப்ளிக் ரிலேசன், விளம்பரம், விஷுவல் கம்யூனிக்கேசன், மீடியே சயன்ஸ் ஆகியவற்றில் ஏதாவது ஒன்றை படித்திருக்க வேண்டும். அல்லது, அந்தப் படிப்பில் முதுநிலை படிப்பும் படித்திருக்கலாம். அல்லது, ஜர்னலிசம் அல்லது மீடியா சயன்ஸ் படிப்பில் 5 ஆண்டுகள் ஒருங்கிணைந்த கல்வியை முடித்திருக்கலாம். இதற்காக தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் தற்காலிக விதிகளில் உரிய திருத்தங்கள் மேற்கொள்ளப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.