சென்னை: சென்னை அப்போலோ மருத்துவமனையில் இன்று 6வது நாளாக சிகிச்சை பெற்று வரும் முதல்வர் ஸ்டாலின், அங்கிருந்தே அலுவல் பணிகளை  தொடங்கி உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு தலைசுற்றல் ஏற்பட்டதால்,  கடந்த 21ந்தேதி (ஜுலை 21, 2025) அன்று சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.  இன்று 6வது நாளாக மருத்துவமனையில் சிகிச்சையுடன் ஓய்வு எடுத்து வரும் முதலமைச்சர் ஸ்டாலின், அங்கிருந்தே அலுவல் பணி களை தொடங்கி உள்ளார்.

முன்னதாக, இன்று காலை தலைமைச் செயலாளர் முருகானந்தம் மருத்துவமனைக்கு வருகை தந்து, முதலமைச்சரை சந்தித்த நிலையில், அங்குள்ள ஓய்வறையில் இருந்து,  அரசின் திட்டங்கள் குறித்து அதிகாரிகளுடன் முதல்வர் ஆலோசனை மேற்கொண்டார்.

டல்நிலை பாதிப்பு காரணமாக கடந்த 21ந்தேதி  சென்னை கிரிம்ஸ்ரோடு அப்போலோவில் அனுமதிக்கப்பட்டுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இன்று 6வது நாளாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவருக்கு அப்போலோ கேன்சர் மருத்துவமனையிலும் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்ட நிலையில், ஜுலை 24 அன்று அவருக்கு ஆஞ்சியோ சோதனை நடத்தப்பட்டதாக கூறப்பட்டது.  அவரது உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ள நிலையில், முதலமைச்சர் ஸ்டாலின் மருத்துவமனையில் இருந்தே மக்கள் பணியாற்றி வருகிறார்.

மக்கள் நலத்திட்டங்கள் தொடர்பாக அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.

அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் முதல்வர் மு.க.ஸ்டாலினை அவரது மனைவி மற்றும் குடும்பத்தினர் கூட இருந்து கவனித்து வருகின்றனர். துணைமுதல்வர் உதயநிதி உள்பட அமைச்சர் துரைமுருகன் மற்றும் முக்கிய அமைச்சர்கள், அதிகாரிகள் அவ்வப்போது மருத்துவமனை சென்று முதலமைச்சரை சந்தித்து வருகின்றனர்.

இந்த நிலையில்,  6வது நாளாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் முதலமைச்சர் ஸ்டாலின் இன்றும் வழக்கம்போல மக்கள் பணியாற்றி வருகிறார். தலைமைச்செயலாளர் முருகானந்தம் உள்பட முக்கிய அதிகாரிகளை அழைத்து, ஆலோசனை நடத்தி வருவதுடன், சட்டம் ஒழுங்கு உள்பட பல்வேறு நிகழ்வுகள் குறித்தும் கேட்டறிந்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.