சென்னை: பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் நடைப்பயணத்துக்கு தடையில்லை என்று பாமக வழக்கறிஞர் பாலு விளக்கம் அளித்துள்ளார்.

வன்னியர் இடஒதுக்கீடு உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் , ‘தமிழக மக்களின் உரிமையை மீட்போம்’ எனக் கூறி, பாமக நிறுவனர் ராமதாஸ் பிறந்தநாளை முன்னிட்டு, நேற்று (ஜுலை 25) முதல் 100 நாட்கள் நடைபயணம் மேற்கொண்டுள்ளார். இந்த நடை பயணத்துக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள ராமதாஸ், இந்த நடை பயணத்தை தடை செய்ய வேண்டும் ன டிஜிபியிடம் மனு அளித்தார். இதையேற்று. ‘பா.ம.க., தலைவர் அன்புமணி நடைபயணத்திற்கு, அனுமதி அளிக்க வேண்டாம்’ என, போலீஸ் அதிகாரிகளுக்கு, டி.ஜி.பி., சங்கர் ஜிவால் உத்தர விட்டுள்ளார் என செய்திகள் பரவின.
இந்த நிலையில், அன்புமணி ராமதாஸின் ‘தமிழக உரிமை மீட்பு பயணம்’ திட்டமிட்டபடி தொடரும் என பாமக வழக்கறிஞரும், பாகம எம்எல்ஏக்களில் ஒருவருமான வழக்கறிஞர் பாலு விளக்கம் அளித்துள்ளார்.
டிஜிபி அலுவலகம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கை ஊடகங்களால் தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளதாக விளக்கம் அளித்துள்ளதாகவும் பாமக வழக்கறிஞர் பாலு விளக்கம்.
முன்னதாக, தி.மு.க., ஆட்சியை எதிர்த்து, அன்புமணி நேற்று திருப்போரூரில் நடை பயணத்தை துவக்கினார். , நேற்று மாலை திருப்போரூரில் நடைபயணத்தைத் துவங்கிய அன்புமணி பேசும்போது, இன்று என் அப்பா ராமதாசின் பிறந்தநாள். அவரது வழியை பின்பற்றி இன்று நடை பயணம் துவக்கியுள்ளேன். இந்த நடைபயணத்தின் வாயிலாக, அவர் நீண்ட காலம் வாழ வாழ்த்து கிறேன்.
தமிழக மக்களுக்கான உரிமைகளை வென்றெடுக்கவும், தமிழகத்தில் நடக்கும் தி.மு.க., ஆட்சியை வீட்டிற்கு அனுப்பவும், 100 நாட்கள் நடைபயணத்தை துவக்கி உள்ளேன். தி.மு.க., அரசு மீது, மக்கள் கடும் கோபத்தில் உள்ளனர். பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. 8 வயது சிறுமி, பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளார். காவல் துறையை, தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும், முதல்வர் ஸ்டாலின் எதையும் கண்டுகொள்வதில்லை.
சேவை உரிமை பெறும் சட்டத்தை கொண்டு வந்தாலே, விண்ணப்பித்த 15 நாட்களுக்குள், அரசின் சேவைகள் மக்களுக்கு கிடை த்து விடும். நான்கரை ஆண்டுகளாக இதை செய்யாமல், ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம் நடத்தி மக்களை ஏமாற்றுகின்றனர். மக்களின் வரிப்பணத்தில் விளம்பரம் செய்கின்றனர். பெண்களுக்கு அரசு கொடுக்கும் 1,000 ரூபாய், அரசு நடத்தும் டாஸ்மாக் மதுக்கடைக்குதான் செல்கிறது.
தி.மு.க., ஆட்சியில், ஒரு விவசாயி கூட மகிழ்ச்சியாக இல்லை. முதல்வர் ஸ்டாலினுக்கும், விவசாயத்திற்கும், எந்த சம்பந்தமும் இல்லை. பெண்கள், விவசாயிகளில் ஒருவர் கூட, தி.மு.க.,வுக்கு ஒட்டளிக்க கூடாது. விளம்பரத்திற்காக அல்ல, ஆட்சி மாற்றத்திற்காகவே இந்த நடைபயணம் என கூறினார்.
