மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கியதிலிருந்து நாடாளுமன்றத்தில் பெரும் அமளி நிலவி வரும் நிலையில், பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் மற்றும் அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக நடத்தப்பட்ட ஆபரேஷன் சிந்தூர் குறித்து வரும் திங்களன்று மக்களவை சிறப்பு விவாதம் நடத்தும் என்று மத்திய நாடாளுமன்ற விவகார அமைச்சர் கிரேன் ரிஜிஜு வெள்ளிக்கிழமை உறுதிப்படுத்தினார்.
இதுகுறித்து நாடாளுமன்ற அலுவல் ஆய்வுக் குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டதாக தெரிவித்தார்.

“பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் மற்றும் ஆபரேஷன் சிந்தூர் குறித்து திங்கட்கிழமை மக்களவையில் சிறப்பு விவாதம் நடத்தப்படும் என்று அலுவல் ஆய்வுக் குழு முடிவு செய்துள்ளது” என்று அவர் கூறினார்.
எதிர்க்கட்சிகள் எழுப்ப விரும்பும் பல பிரச்சினைகள் உள்ளன, ஆனால் முதலில் ஆபரேஷன் சிந்தூர் குறித்த விவாதம் எடுக்கப்படும் என்றும் அவர் கூறினார்.
ஆபரேஷன் சிந்தூர் குறித்த விவாதத்திற்கு 16 மணி நேரம் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் ரிஜிஜு மேலும் கூறினார். மேலும், நடைபெறும் என்று தெரிவித்தார்.