டெல்லி
இன்று 5 ஆன் நாளாக நாடாளுமன்றம் முடங்கி உள்ளது.

விரைவில் சட்டசபை தேர்தலுக்கு தயாராகி வரும் பீகாரில், வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தத்தை தேர்தல் கமிஷன் மேற்கொண்டு வருவற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் எதிர்க்கட்சிகள், இந்த பிரச்சினை குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க வலியுறுத்தி வருகின்றன. அரசு இதற்கு இதுவரை செவிசாய்க்கவில்லை.
எனவே நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் புயல் வீசி வருவதால் கடந்த 21-ந்தேதி தொடங்கிய நாடாளுமன்ற தொடரில் இதுவரை குறிப்பிடத்தக்க அலுவல் எதுவும் நடைபெறவில்லை.
இன்றும் இந்த நாடாளுமன்ற முடக்கம் 5-வது நாளாக நீடித்தது. நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் இன்று பகல் 11 மணிக்கு மக்களவை கூடியதும் எதிர்க்கட்சிகள் பீகார் மாநில சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்தத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து பிரச்சினை கிளப்பினார்கள். இதனால் சபையில் கடும் அமளி ஏற்பட்டது.
கூட்டத்த் தொடர் கடும் கூச்சல் நிலவியதால் சபை 2 தடவை ஒத்திவைக்கப்பட்டது. மீண்டும் எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால் இன்று நாள் முழுக்க நாடாளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டது. திங்கள் கிழமை மீண்டும் நாடாளுமன்றம் கூடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.