துரை

சாத்தான் குளம் தந்தை மகன் கொலை வழக்கில் ஆய்வாளர் ஸ்ரீதர் அப்ரூவராக மாற சிபிஐ எதிர்ப்பு தெரிவித்துள்ளது,

சாத்​தான்​குளத்​தைச் சேர்ந்த ஜெய​ராஜ், அவரது மகன் பெனிக்ஸ் ஆகியோர் 2020 ஜூன் 19-ல் போலீ​ஸா​ரால் தாக்​கப்​பட்​ட​தில் உயிர்​இழந்​த வழக்கை உயர் நீதி​மன்ற உத்​தர​வுப்படி சிபிஐ விசா​ரித்து வரு​கிறது. சாத்​தான்​குளம் காவல்​நிலைய ஆய்​வாளர் ஸ்ரீதர், உதவி ஆய்​வாளர்​கள் பால​கிருஷ்ணன், ரகு​கணேஷ், தலை​மைக் காவலர் முரு​கன், காவலர்​கள் முத்​து​ராஜா, செல்​லதுரை, தாமஸ் பிரான்​சிஸ், வெயில் ​முத்து உட்பட 9 பேர் கைது செய்​யப்​பட்​டனர்.

சுமார் 4 ஆண்டுகளுக்குமேலாக இந்த வழக்கு மதுரை மாவட்ட முதலா​வது கூடு​தல் நீதி​மன்​றத்​தில் நடந்து வரும் ​நிலை​யில், காவல் ஆய்​வாளர் ஸ்ரீதர் அப்​ரூவராக மாறப்​போவ​தாக நீதி​மன்​றத்​தில் தாக்​கல் செய்​த மனுவில் சாத்தான்குளம் வழக்​கில் குற்​றம் செய்​தோருக்​குத் தண்​டனை கிடைக்க வேண்​டும் என்பதால் தாம் அப்ரூவ​ராக மாற விரும்​புவதாகவும். அதற்கு அனு​மதி வழங்க வேண்​டும் என்று, தெரி​வித்​திருந்​தார். இதற்கு பதில் அளிக்​கு​மாறு சிபிஐக்கு நீதிபதி உத்தரவிட்டார்.

நேற்று இந்த வழக்கு நீதிபதி முத்​துக்​குமரன் முன்​னிலை​யில் விசா​ரணைக்கு வந்​தபோது. காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் பலத்த பாது​காப்​புடன் நீதி​மன்​றத்​தில் ஆஜர்​படுத்​தப்​பட்​டார். ஸ்ரீதாரின் அப்​ரூவ​ராக மாற விரும்​பும் கோரிக்​கைக்​கு ஜெய​ராஜ் மனைவி செல்​வ​ராணி தரப்​பிலும், சிபிஐ தரப்​பிலும் கடும் எதிர்ப்பு தெரி​வித்து மனுக்​கள் தாக்​கல் செய்யப்​பட்​டன. இதையடுத்து விசா​ரணையை ஜூலை 28-க்கு நீதிபதி தள்​ளி​வைத்​தார்.