ஜார்ஜியாவின் படுமியில் இன்று நடைபெற்ற FIDE மகளிர் உலகக் கோப்பை செஸ் சாம்பியன்ஷிப் அரையிறுதியில் இந்தியாவின் கோனேரு ஹம்பி சீனாவின் லீ டிங்ஜியை வீழ்த்தினார்.

ஹம்பியின் இந்த வெற்றியை அடுத்து இறுதிப் போட்டியில் முழுக்க முழுக்க இந்தியர்கள் மட்டுமே பங்கேற்கின்றனர்.

இதனால் இந்தியாவுக்கு முதல் மகளிர் உலகக் கோப்பை பட்டம் உறுதி செய்யப்பட்டுள்ளது.

புதன்கிழமையன்று நடைபெற்ற மற்றொரு அரையிறுதிப் போட்டியில் சீனாவின் டான் ஜோங்கியை வீழ்த்தி திவ்யா தேஷ்முக் இறுதிப் போட்டிக்குள் நுழைந்தார்.

FIDE உலகக் கோப்பை இறுதிப் போட்டி ஜூலை 26 மற்றும் 27 ஆகிய தேதிகளில் நடைபெறும், தேவைப்பட்டால், ஜூலை 28 ஆம் தேதி டை பிரேக்கர்கள் திட்டமிடப்பட்டுள்ளன.

இன்றைய வென்றியின் மூலம் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் நடைபெற உள்ள கேண்டிடேட்ஸ் செஸ் போட்டியில் கோனேரு ஹம்பியும் இடம்பெறுவது உறுதி செய்யப்பட்டுள்ளது.