சென்னை : அமைச்சர் நேருவின் சகோதரர் ரவிச்சந்திரன்மீது அமலாக்கத்துறை பதிவு செய்த வழக்கை சென்னை  உயர்நீதிமன்றம்  ரத்து செய்து உத்தரவிட்டு உள்ளது.

கடந்த ஏப்ரல் 7ந்தேதி அன்று திருச்சியில் உள்ள  அமைச்சர் நேரு, அவரது தம்பி ராமஜெயம் மற்றும் மற்ற தம்பிகளான ரவிச்சந்திரன் உள்பட பலரது வீடு மற்றும் அலுவலகங்களில் அமலாக்கத்துறை சோதனை நடைபெற்றது.

 சட்டவிரோத பண பரிமாற்றம்  நடைபெற்று வருவதாக எழுந்த புகாரின் பேரில் அமலாக்கத்துறை  இந்த சோதனையை செய்ததாக கூறப்பட்டது. திருச்சி மட்டுமின்றி,   அடையாறு, தேனாம்பேட்டை, சிஐடி காலனி, எம்.ஆர்.சி.நகர் உள்ளிட்ட இடங்களிலும்,   அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரர் கே.என்.ரவிச்சந்திரன் தொடர்புடைய இடங்கள் மற்றும்,   TVH கட்டுமான நிறுவனங்களுக்கு சொந்தமான இடங்களில் சோதனை நடைபெற்றது. . கோவையில் அமைச்சர் கே.என். நேருவின் சகோதரர் மணிவண்ணன் வீட்டிலும் அமலாக்கத்துறை சோதனை நடைபெற்றது. கடந்த 2013ல் ரவிச்சந்திரன் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியிடமிருந்து ரூ.30 கோடி கடன் பெற்ற விவகாரம் தொடர்பாக நேருவின் தம்பி ரவிச்சந்திரனுக்கு சொந்தமான இடங்களில்  சோதனை நடத்தப்பட்டது.

இதை எதிர்த்து,  அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரர் ரவிச்சந்திரன்  தொடர்ந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் அவர்மீது அமலாக்கத்துறை பதிவு செய்த வழக்கை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சோதனையின் போது கைப்பற்றப்பட்ட பொருட்களையும் திருப்பி ஒப்படைக்க ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.