சென்னை: தலைசுற்றல் காரணமாக  அப்போலோவில் அனுமதிக்கப்பட்டு உள்ள முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு  என்ன பிரச்சினை என்பது குறித்து  அப்பல்லோ மருத்துவமனை அறிக்கை வெளியிட்டு உள்ளது.

முதல்வர்  ஸ்டாலினுக்கு தலை சுற்றல் எதனால் ஏற்பட்டது. அவரது உடல் நலம் எப்படி உள்ளது என்பது தொடர்பாக அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.  அதில் அடுத்த இரு நாட்களில் முதல்வர் தனது வழக்கமான பணிகளை மேற்கொள்வார் என குறிப்பிட்டுள்ளது.

முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு திடீரென தலைசுற்றல் ஏற்பட்டது. இதை அடுத்து, அவர் கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டார். அவருக்கு, அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு இன்று காலை ஆஞ்சியோ சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

இந்த சிகிச்சை தொடர்பாக அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு அண்மையில் ஏற்பட்ட தலைச் சுற்றல் காரணமாக அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பல்வேறு மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. இந்த பரிசோதனையின் முடிவில் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு இதயத் துடிப்பில் சில வேறுபாடுகள் இருப்பது தெரிய வந்தது. இதன் காரணமாகவே, அவருக்கு தலை சுற்றல் ஏற்பட்டது கண்டறியப்பட்டது.

இந்த நிலையில், இதய சிகிச்சை மருத்துவர் செங்குட்டுவேலு தலைமையிலான மருத்துவக் குழுவினர் அறிவுறுத்தலின்படி, இதயத்துடிப்பு வேறுபாட்டை சரி செய்யும் வகையில், முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு இன்று (ஜூலை 24) காலை ஆஞ்சியோகிராம் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இந்த சிகிச்சையானது நல்ல முறையில் செய்யப்பட்டது. தற்போது, முதல்வர் மு.க.ஸ்டாலின் நலமுடன் உள்ளார். அடுத்த இரண்டு நாள்களில் அவர் தனது பணிகளை மேற்கொள்வார்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.