மாஸ்கோ: ரஷ்யாவில் இருந்து 50 பயணிகளுடன் இன்று காலை பறந்த விமானம் திடீரென மாயமான நிலையில், அந்த விமானம் விழுந்து நொறுங்கி விபத்துக்கு உள்ளது தெரிய வந்துள்ளது. இந்த விபத்தில் அதில் பயணித்த அனைவரும் மரணித்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

சமீப காலமாக விமான விபத்துக்கள், விமானங்களில் பல்வேறு பழுதுகள் என அதிர்ச்சிகரமான சம்பவங்கள் அடுத்தடுத்து அரங்கேறி வருகின்றன. சமீபத்தில் அகமதாபாத்தில் நடந்த ஏர் இந்தியா விமான விபத்து உலக நாடுகளை அதிர்ச்சி அடைய செய்தது. இந்த சம்பவம் மறைவதற்குள், வங்கதேச விமானம் ஒன்று விபத்துக்குள்ளாகி பலர் உயிரிழந்துள்ளனர். இந்த சோகம் மறைவதற்குள் 50 பயணிகளுடன் சென்ற ரஷிய விமானம் வானில் பறந்தபோது திடீரென ராடாரில் இருந்து மாயமான நிலையில், தற்போது விபத்துக்குள்ளது தெரிய வந்துள்ளது.
ரஷியாவின் அமூர் பிராந்தியத்தில் உள்ள திண்டா நகரை நோக்கி பயணித்த ரஷ்ய ஆன்டோவ் அவ்-24 வகை பயணிகள் விமானம் திடீரென ரடாரில் இருந்து மாயமான நிலையில், அந்த விமானன்ம விபத்துக்குள்ளானது தெரிய வந்துள்ளத.
மாயமான விமானமான An-24 என்பது பழமையான சோவியத் தயாரிப்பு விமானத்தில், சுமார் 50 பயணிகள், இதில் 5 குழந்தைகள் மற்றும் 6 விமான ஊழியர்கள் இருந்ததாக கூறப்படுகிறது. அங்காரா ஏர்லைன்ஸ்விமான நிறுவனத்தால் இயக்கப்பட்டு வந்த ஆன்டோநோவ் அவ் வகையைச் சேர்ந்தது. இந்த டர்போப்ராப் வகை விமானம் குறுகிய தூரங்களுக்கு மட்டுமே இயக்கப்பட்டு வந்தது.
இந்த நிலையில், இந்த விமானம் ரஷ்யாவின் கிழக்கு பகுதியில் அமைந்துள்ள அமூர் மாகாணம் அருகே, திண்டா நகரத்தை நோக்கிச் சென்றபோது திடீரென விமானக் கட்டுப்பாட்டு நிலையத்துடன் தொடர்பு திடீரென துண்டிக்கப்பட்டது. இதனுடன், ராடாரிலிருந்தும் அது மறைந்துவிட்டது. சம்பவம் உறுதியானதும், ரஷ்யாவின் அவசரநிலை சேவைத் துறை மற்றும் விமானப் பாதுகாப்புத் துறைகள் இணைந்து தீவிர தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கைகள் மேற்கொண்டன.
,இதில் விமானம் விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானது கண்டறியப்பட்டு உள்ளது.. விமானத்தின் எரியும் சிதைவுகள் கண்டெடுக்கப்பட்டதாக இன்டர்ஃபாக்ஸ் மற்றும் ஷாட் செய்தி நிறுவனங்கள் தெரிவித்தன. இந்தவிபத்தில் அனைவரும் உயிரிழந்திருக்கலாம் என கூறப்படுகிறது. இதையடுத்து அங்கு மீட்பு பணிகள் நடைபெற்று வருகின்றன,