சென்னை
மதிமுக முதன்மை செயலாளர் துரை வைகோ தாம் பட்டியலின மக்களுக்கு துணையாக இருப்பதாக தெரிவித்துள்ளார்.

மதிமுக முதன்மை செயலாளர் துரை வைகோ சமூக வலைத்தளத்தில்,
”சிறுபான்மையினராக இருக்கட்டும், பட்டியலினத்தவராக இருக்கட்டும், அவர்களின் உரிமைகளுக்காக எனது கடமை சற்று கூடுதலாகவும் வீரியமாகவும் இருக்கும்.
இதை அந்த மக்களும் அறிவார்கள். அவர்களில் ஒருவரான உச்ச நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் ஹெச்.ஆர்.கான், எனது நாடாளுமன்ற உரையை குறிப்பிட்டு நன்றி தெரிவித்தார்.
அவதூறுகளை குப்பைத் தொட்டியில் வீசி, எப்போதும் போல் ஒடுக்கப்பட்ட மற்றும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு உற்ற தோழனாக, உறுதுணையாக நிற்பேன்.
என்று பதிவிட்டுள்ளார்.
Patrikai.com official YouTube Channel