சென்னை: கால்நடை மருத்துவ படிப்பில் 7.5% அரசுப் பள்ளி மாணவர்களுக்கான கலந்தாய்வு இன்று தொடங்கி உள்ளது.
தமிழ்நாட்டில் அகில இந்திய எம்.பி.பி.எஸ், பிடிஎஸ் மருத்துவம் படிப்புகள் மற்றும் கால்நடை மருத்துவ படிப்புகளுக்கான கலந்தாய்வு ஜூலை 21ந்தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், கால்நடை மருத்துவ படிப்பில் 7.5% அரசுப் பள்ளி மாணவர்களுக்கான கலந்தாய்வு இன்று தொடங்குகிறது. 7.5 சதவீத உள் இடஒதுக்கீடின் கீழ் அரசு பள்ளி மாணவர்களுக்கான கலந்தாய்வு இன்று நடைபெறுகிறது. கால்நடை மருத்துவ அறிவியல் மற்றும் பராமரிப்பு [பிவிஎஸ்சி ஏஹெச்] படிப்புக்கு 660 இடங்கள் உள்ளன. பதிவு மற்றும் கல்லூரி வளாக விருப்பத்தை ஆன்லைனில் பதிவு செய்ய நாளை கடைசி நாளாகும்.
ஏற்கனவே 2025 – 26ம் கல்வியாண்டிற்கான கால்நடை மருத்துவப் படிப்பில் பொதுப்பிரிவினருக்கான கலந்தாய்வு இணையதளம் மூலம் நடைபெற்று வருகிறது. ஏற்கனவே மாற்றுத் திறனாளிகள், விளையாட்டு வீரர்கள், முன்னாள் ராணுவத்தினரின் வாரிசுகள் கலந்தாய்வு நடைபெற்ற வந்த நிலையில், இன்று அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5% இடஒதுக்கீட்டு பிரிவினருக்கான கலந்தாய்வு நேரடியாக மாதவரத்தில் உள்ள கால்நடை மருத்துவ பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெறுகிறது.