சென்னையில் இன்று ஆபரண தங்கம் விலை கிராம் ஒன்றுக்கு ரூ. 95 அதிகரித்துள்ளது.

நேற்று ஒரு கிராம் ரூ. 9285க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் இன்று காலை விலை அதிகரித்து ஒரு கிராம் ரூ. 9380க்கு விற்பனை செய்யப்படுகிறது.

ஆபரண தங்கம் நேற்று ஒரு கிராமுக்கு ரூ. 105 அதிகரித்த நிலையில் இன்றும் அதிகரித்தது.

இதனால் ஒரு சவரன் ஆபரண தங்கம் இன்று ரூ. 75040க்கு விற்பனை செய்யப்படுகிறது.

இதையடுத்து வரலாற்றில் முதல்முறையாக தங்கம் விலை சவரனுக்கு ரூ. 75000த்தை தாண்டியுள்ளது.

அதேபோல் வெள்ளி விலை கிராமுக்கு ஒரு ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் ரூ. 129க்கு விற்பனை செய்யப்படுகிறது.