துரை

காவல்துறையினர் தாக்குதலில் உயிரிழந்த அஜித்குமார் குடும்பத்துக்கு ரூ. 25 லட்சம் வழங்க மதுரை உயர்நீதிமன்றம் தமிழ்க அரசுக்கு உத்தாரவிட்டுள்ளது/

காவல்துறையினர் தாக்கியதில் சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட மடப்புரம் கோவில் காவலர் அஜித்குமார் மரணம் அடைந்தார். நாட்டையே உலுக்கிய இந்த கொடூர சம்பவத்துக்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தன. இதையொட்டி 5 காவலர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

மாவட்ட நீதிபதி ஜான் சுந்தர்லால் சுரேஷ் தலைமையில் இந்த வழக்கு விசாரணை நடைபெறுகிறது.  இந்த வழக்கு விசாரணையை சி.பி.ஐ.க்கு  மாற்ற த்மிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டதையடுத்து, தற்போது இந்த வழக்கு தொடர்பாக சி.பி.ஐ அதிகாரிகள் ஐந்தாவது நாளாக விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இன்இ அஜித்குமார் கொலை வழக்கு தொடர்பாக உயர்நீதிமன்ற மதுரை கிளையில் விசாரணை நடைபெற்றபோது, அஜித்குமார் கொலை வழக்கில் அவரது குடும்பத்திற்கு இடைக்கால இழப்பீடாக ரூ.25 லட்சம் வழங்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டது., உரிய பாதுகாப்பு கோரி சாட்சியங்கள் தொடுத்த வழக்கை 7 நாட்களுக்குள் விசாரிக்க மாவட்ட நீதிமன்றத்துக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதுடன் வெறும் ரூ 7.50 லட்சம் இழப்பீடாக வழங்கியது போதாது என்றும், கூடுதல் இழப்பீடு தேவைப்பட்டால் சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தை அணுகலாம் என்று, நீதிபதிகள் அறிவுறுத்தியுள்ளனர்.