சென்னை: டிஎன்பிஎஸ்பி குரூப்4  விடைத்தாள் பிரிக்கப்பட்டதாக கூறப்படும் நிகழ்வுக்கு டிஎன்பிஎஸ்சி மறுப்பு தெரிவித்துள்ளது. மேலும்,  வினாத்தாள், விடைத்தாள் அனுப்பும்  நடைமுறை மாற்றம் செய்யப்படுவதாகவும்,   டி.என்.பி.எஸ்.சி தலைவர் பிரபாகர் விளக்கம் அளித்துள்ளார்.

சேலத்தில் குரூப்-4 விடைத்தாள் கட்டுகள் பிரிப்பு தொடர்பான சர்ச்சை குறித்து டி.என்.பி.எஸ்.சி தலைவர் பிரபாகர் விளக்கம் அளித்துள்ளார். “சென்னைக்கு அனுப்பப்பட்ட சேதமடைந்த பெட்டிகளில் விடைத்தாள்கள் இல்லை. குரூப்-4 விடைத்தாள்கள் அனைத்தும் டிரங்க் பெட்டிகளுக்குள் வைத்து கடந்த 14 ஆம் தேதியே சென்னை கொண்டுவரப்பட்ட‌து.

டி.என்.பி.எஸ்.சி கேள்வித்தாள்களை தேர்வு மையங்களுக்கு அனுப்பும் முறையில் மாற்றம் செய்யப்படுவதாக கூறியவர், இனிமேல்,  குரூப்-4 விடைத்தாள்கள் சாதாரண அட்டைப் பெட்டிகளில் கொண்டு வரப்படாது,  அதற்கு பதிலாக ட்ரங்க் பெட்டிகளில் வைத்து சீல் வைத்து அனுப்பபடும் என்றும், விடைத்தாள் தவிர்த்து மற்ற தேர்வு ஆவணங்கள் மட்டுமே அட்டைப் பெட்டியில் அனுப்பப்படும் என்றவர், டி.என்.பி.எஸ்.சி கேள்வித்தாள்கள் இனி தாசில்தார் கைகளுக்கு செல்லாது” என்றும் கூறினார்.

மேலும் குரூப்-4 விடைத்தாள் கட்டுகள் பிரிப்பு ஏதும் நடைபெற வில்லை என கூறிய என டி.என்.பி.எஸ்.சி தலைவர் பிரபாகர், ஆவணங்கள் பிரிக்கப்பட்டதாக கூறப்படும்  நிகழ்வு எங்கே நடந்தது? என்பது குறித்து விசாரணை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.