சென்னை
இன்று தமிழக முதல்வர் மு க ஸ்டாலினுக்கு சில மருத்துவ பரிசோதனைகள் நடைபெற உள்ளதாக துணை முதல்வர் உதயநிதி தெரிவித்துள்ளார்.

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தினமும் நடைபயிற்சி செல்வது வழக்கமாகும். அதனபடி நேற்று நடைபயற்சி மேற்கொண்டிருந்தபோது அவருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளதால் அவர் கிரிம்ஸ் ரோட்டில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.
அப்போலோ மருத்துவமனை நிர்வாகம் இது குறித்து ,
“காலை நடைபயிற்சியின் போது தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு லேசான தலைசுற்றல் ஏற்பட்டுள்ளது. இதனால் மருத்துவ பரிசோதனைகளுக்காக கிரிம்ஸ் ரோட்டில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு உள்ளார். அவருக்கு மருத்துவ பரிசோதனைகள் நடந்து வருகிறது.”
என அறிவித்துள்ளது.
துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் செய்தியாளர்களிடம்,
“தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு தலைச்சுற்றல் இருந்துள்ளது. 2 நாளில் சரியாகி வீடு திரும்புவார். முதல்வரை 2 நாட்கள் ஓய்வு எடுக்க அறிவுறுத்தி உள்ளனர். முதல்வருக்கு நாளை ஒரு சில மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட உள்ளன. முதல்வர் மு.க.ஸ்டாலின் நலமுடன் உள்ளார்’”
என்று தெரிவித்துள்ளார்.