சென்னை: “மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்” பயணம் இமாலய வெற்றி என முன்னாள் முதல்வரும், தற்போதைய எதிர்க்கட்சி தலைவருமான  எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

2026 தமிழக சட்டசபை தேர்தலை எதிர்கொள்ள  தமிழக அரசியல் கட்சிகள் தயாராகி வருகின்றன. ஏற்கனவே திமுக அணி தேர்தல் பிரசாரங்களை முன்னெடுத்து, உறுப்பினர் சேர்க்கையையும் தீவிரமாக செயல்படுத்தி வருகிறது. இதைத்தொடர்ந்து, அதிமுக தரப்பில் தேர்தல் பணிகள் முடுக்கி விடப்பட்டு உள்ளது. அதைத்தொடர்ந்த, அ.தி.மு.க. பொதுச்செயலாளரான முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி,   தமிழகம் முழுவதும் மக்கள் சந்திப்பு சுற்றுப்பயணத்தை தொங்கி உள்ளார்.

 ”மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்” என்ற பெயரில் எடப்பாடி பழனிசாமி  தொகுதி வாரியாக சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். அவரது முதல்கட்ட சுற்றுப்பயணம், ஜூலை 7ந்தேதி கோவை மேட்டுப்பாளையத்தில் தொடங்கிய நிலையில், ஜூலை 23ல் பட்டுக்கோட்டையில் நிறைவுபெற உள்ளது.

எடப்பாடி பழனிச்சாமியின்,  “மக்களைக் காப்போம் – தமிழகத்தை மீட்போம்”  சுற்றுப்பயணத்தின்போது, மக்கள் சந்திப்பு, விவசாயிகளுடன் கலந்துரையாடல் என பலதரப்பட்ட மக்களையும் சந்தித்து வருகிறார். அவரது முதற்கட்ட  பயணம் வரும் 23ந்தேதியுடன் முடிவடைய உள்ளது.

 2-ம்​கட்ட பிரச்​சார பயணத்தை ஜூலை 24-ம் தேதி தொடங்​கி, ஆக.8-ம் தேதி நிறைவு செய்ய உள்​ளார். இதன்​படி, 24-ம் தேதி புதுக்​கோட்டை மாவட்​டத்​துக்கு உட்​பட்ட கந்​தர்​வக்​கோட்​டை, ஆலங்குடி, அறந்​தாங்கி தொகு​தி​களில் தொடங்கி 36 தொகுதிகளில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார்.

இந்த நிலையில்,  “மக்களைக் காப்போம் – தமிழகத்தை மீட்போம்” என்கிற உயரிய லட்சியத்துடன், மக்கள் விரோத ஸ்டாலின் Failure Model ஆட்சியை அகற்ற கோவையில் 7.7.2025 அன்று துவங்கிய எழுச்சிப் பயணத்திற்கு இமாலய வெற்றியை தொடர்ந்து வழங்கி வரும் தமிழக மக்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள்.

புரட்சிப் பயணத்தை, மக்கள் எழுச்சிப் பயணமாக மாற்றி, அதை இமாலய வெற்றிப் பயணமாக்கியதில் முழு பங்கும் தமிழக மக்களாகிய உங்கள் அனைவரையுமே சாரும். உங்கள் அனைவருக்குமே தெரியும், எனது முதற்கட்டமான இந்த எழுச்சிப் பயணத்தை ஜூலை 7-ம் தேதி கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் தொகுதியில் ஆரம்பித்தது. அன்று முதல்  திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி வரை பிரசாரப் பயணத்தை தொடர்ந்து வருகிறேன். கோவை, விழுப்புரம், கடலூர், பெரம்பலூர், அரியலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் 31 சட்டமன்றத் தொகுதிகளில் வெற்றிகரமாக சுமார் 12.5 லட்சம் மக்களை சந்தித்திருக்கிறேன் என தெரிவித்துள்ளார்.

‘மக்களை காப்போம்’ ‘தமிழகத்தை மீட்போம்’: ஜூலை 24 முதல் 2வது கட்ட பிரசாரத்தை தொடங்குகிறார் எடப்பாடி பழனிச்சாமி…