சென்னை: ஓரணியில் தமிழ்நாடு என்ற பெயரில் திமுக உறுப்பினர் சேர்க்கை நடைபெற்று வரும் நிலையில், அப்போது, பொதுமக்களின் போன் நம்பர் பெற்று ஓடிபி பெற உயர் நீதிமன்ற மதுரை கிளை தடை விதித்துள்ளது.
ஓடிபி தகவல்களை பொதுமக்கள் யாருக்கும் வழங்க வேண்டாம் என்று காவல்துறையினர் எச்சரித்து வரும் நிலையில், திமுகவினர் எதற்காக ஓடிபி கேட்கிறார்கள் என்றும் நீதிபதிகள் கேள்வி எழுப்பியதுடன், ஓடிகே கேட்க தடை விதித்து உத்தரவிட்டுள்ளனர்.

தமிழ்நாடு அரசு ஓரணியில் தமிழ்நாடு என்ற பெயரில் வீடு வீடாக சென்று மக்களை சந்தித்து திமுக உறுப்பினர் சேர்க்கையை நடத்தி வருகிறது. கீழடி போன்ற மக்கள் நலத்திட்டங்களை கூறி,, பொதுமக்களை திமுக உறுப்பினராக சேர்ப்பது சலசலப்பை ஏற்படுத்தி வருகிறது. வாக்காளர் பட்டியலை கையில் வைத்துக்கொண்டு வீடு வீடாக சென்று பொதுமக்களை சந்தித்தும், வாக்காளர்களின் போன் நம்பர் கேட்டு வாங்கப்படுவதும், அதைத்தொடர்ந்து, அவர்களது போன் நம்பரைக்கொண்டு, ஓடிபி கேட்கப்படுவதும் சர்ச்சையானது. அனைத்து கட்சிகளை சேர்ந்தவர்களும் இருக்கும் நிலையில், திமுகவினர் கட்டாயப்படுத்தி பொதுமக்களை திமுகவில் உறுப்பினராக்குவது மக்களிடையே அதிருப்தியையும் ஏற்படுத்தி உள்ளது. இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், சம்பந்தப்பட்ட நபர்கள், பொதுமக்களிடம் ஓடிபி பெற உயர் நீதிமன்ற மதுரை கிளை தடை விதித்துள்ளது.
திமுகவின் ஓரணியில் தமிழ்நாடு என்ற உறுப்பினர் சேர்க்கை பிரசாரம் தமிழகம் முழுவதும் தொடங்கி நடந்து வருகிறது. இதனை எதிர்த்து உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தொடரப்பட்ட வழக்கை விசாரித்த நீதிபதிகள், மக்களிடைமிருந்து ஓடிபி பெற தடை விதித்துள்ளனர். இந்த வழக்கில், இந்திய தேர்தல் ஆணையத்தையும் சேர்த்து, பதிலளிக்குமாறு உத்தரவிட்டுள்ளனர்.
டிஜிட்டல் முறையில் தனிநபர் தரவுகள் எவ்வாறு பாதுகாப்படுகிறது என்பது பற்றி மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டிருப்பதோடு, ஓடிபி தகவல்களை பொதுமக்கள் யாருக்கும் வழங்க வேண்டாம் என்று காவல்துறையினர் எச்சரித்து வரும் நிலையில், எதற்காக ஓடிபி கேட்கிறார்கள் என்றும் நீதிபதிகள் கேள்வி எழுப்பியிருக்கிறார்கள்.
ஆதார் உள்ளிட்ட விவரங்களை சேகரிக்கும் நிறுவனம் அதனை விற்பனை செய்தால் என்ன செய்வது? சேகரிக்கப்படும் விவரங்கள் எவ்வாறு கையாளப்படுகிறது என்பதற்கான விவரங்கள் இல்லை என்றும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
தமிழகத்தில் ‘ஓரணியில் தமிழ்நாடு’ திட்டத்தின்கீழ் உறுப்பினா் சோ்க்கையில், திமுகவினர் வீடு வீடாகச் சென்று, மக்களிடமிருந்து வாக்காளர் அட்டை விவரங்களையும் ஓடிபி எண் பெற்று ஓரணியில் தமிழ்நாடு செயலியில் பதிவேற்றம் செய்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக, திமுகவினர் ‘ஓரணியில் தமிழ்நாடு’ என்ற பெயரில் ஆதார் விவரங்களைச் சேகரிப்பது சட்டவிரோதமானது என திருப்புவனத்தைச் சேர்ந்த ராஜ்குமார் மதுரை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அவரது மனுவில், திமுகவினர் வீடுகளுக்கு வந்து ஆதார், அடையாள அட்டை நகல்களைக் கேட்டு மிரட்டுவதாகவும், அரசு உதவித்தொகை நிறுத்தப்படும் என பயமுறுத்துவதாகவும், மேலும் தி.மு.க. பொதுச்செயலாளர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், இது தொடர்பாக மத்திய அரசு மற்றும் ஆதார் தலைமை அதிகாரி விசாரணை நடத்த வேண்டும். இது தனி உரிமை மீறல் என்றும், சேகரிக்கப்பட்ட விவரங்களை அழிக்கவும், நடவடிக்கை எடுக்கவும் கோரிக்கை வைத்திருந்ததார். இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது.
வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம்,. ஓடிகே கேட்பது சட்டவிரோதம், காவல்துறையினர் யாருக்கும் ஓடிபி கூற வேண்டாம் என கூறும்போது, இவர்கள் எப்படி ஓடிகே கேட்க முடியும் என்று கூறி, தடை விதித்தது.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய ராஜ்குமார், தி.மு.க.வினர் ‘ஓரணியில் தமிழ்நாடு’ என்ற பெயரில் உறுப்பினர் சேர்க்கை நடத்தி வருகின்றனர். இதற்காக அவர்கள் வீடு வீடாக சென்று மக்களை தொந்தரவு செய்கின்றனர் என்றவர், தி.மு.க.வினர் பொதுமக்களிடம் ஆதார் எண், வாக்காளர் அடையாள அட்டை, வங்கி கணக்கு புத்தகம் போன்ற ஆவணங்களை கேட்கின்றனர். ஆவணங்களை கொடுக்க மறுத்தால், அரசு வழங்கும் உதவித்தொகை ரூ.1000 நிறுத்தப்படும் என்று மிரட்டுகின்றனர்.
“எங்கள் வீட்டிற்கு தி.மு.க.வினர் 10 பேர் வந்தனர். அவர்கள் எங்கள் அனுமதி இல்லாமல் வீட்டில் தமிழக முதல்வர் படத்துடன் ‘ஓரணியில் தமிழ்நாடு’ என அச்சிடப்பட்ட சுவரொட்டியை ஒட்டினர்.” மேலும், “குடும்ப உறுப்பினர்கள் அனைவரின் ஆதார் எண், வாக்காளர் அடையாள அட்டை, வங்கி கணக்கு புத்தக நகல் மற்றும் பிற அடையாள அட்டைகளை கேட்டனர். இந்த ஆவணங்களை தர மறுத்த போது, வீட்டுப் பெண்கள் மாதம் தோறும் அரசிடம் பெற்று வரும் ஆயிரம் ரூபாயை நிறுத்திவிடுவதாக மிரட்டியதுடன், தனிப்பட்ட செல்போன் எண்களை வாங்கி, OTP (One-Time Password) மூலம் தி.மு.க.வில் உறுப்பினராக சேர்க்கின்றனர். தி.மு.க.வில் சேரவில்லை என்றால் அரசு திட்டங்கள் நிறுத்தப்படும் என்று மக்களை வற்புறுத்துகின்றனர். அரசியல் பிரச்சாரத்திற்காக ஆதார் போன்ற தனிப்பட்ட தகவல்களை பயன்படுத்துவது தவறானது.
தி.மு.க.வினர் பொதுமக்களின் ஆதார் அட்டை, குடும்ப அட்டை, செல்போன் எண் போன்ற தனிப்பட்ட விவரங்களை கேட்பது இந்திய குடிமக்களின் அடிப்படை உரிமைகளை மீறும் செயல். இது ஒரு குற்றச்செயல் என்றும் ராஜ்குமார் தெரிவித்துள்ளார்.