சென்னை: ராணுவ வீரர்கள் எளிதாகப் பயன்படுத்தும் வகையில் நவீன சக்கர நாற்காலியை உருவாக்கி உள்ளது சென்னை ஐஐடி. இது பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
வெளிநாடுகளில் சுமார் ரூ.2.50 லட்சத்துக்கு விற்பனை செய்யப்படும் இதுபோன்ற நாற்காலி, ரூ.75ஆயிரத்துக்கு விற்பனை செய்யப்படும் அளவில் ஐஐடி தயாரித்துள்ளது.

இந்தியாவின் சிறந்த கல்வி நிலையங்களில் ஒன்றான சென்னை ஐஐடி பல்வேறு சாதனைகளை செய்து வருகிறது. இதன் தொடர்ச்சியாக தற்போது, போரினால் கால்களை இழக்கும் வீரர்களின் வசதிக்காகவும், மாற்றுத் திறனாளிகள் எளிதாகப் பயன்படுத்தும் வகையில் நவீன சக்கர நாற்காலியை உருவாக்கி உள்ளது.
இந்த சக்கர நாற்காலி ‘ஒய் டி ஒன்’ ( “YD One,”) என குறிப்பிடப்படுகிறது. இலகுரக சக்கர நாற்காலியான இதன் எடை வெறும் 8.5 கிலோ மட்டுமே. சக்கர நாற்காலி. ஊனமுற்றோர் மற்றும் காயமடைந்த வீரர்களுக்கு. வைஸ் அட்மிரல் அனுபம் அவர்களால் சென்னையில் தொடங்கப்பட்ட இந்த சக்கர நாற்காலியானது, நடமாடும் பிரச்சனை உள்ளவர்கள் பயன்பெறுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது/
இந்த வீல் சேர் அறிமுகம் நிகழ்ச்சியில், இந்திய ராணுவ மருத்துவப் பணிகள் தலைமை இயக்குநர் வைஸ் அட்மிரல் அனுபம் மற்றும் சென்னை ஐஐடி தலைவர் காமகோடி உள்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
ஒய் டி ஒன் எனப்படும் எடை குறைந்த நவீன நாற்காலியை அறிமுகப்படுத்திய இந்திய ராணுவ மருத்துவப் பணிகள் தலைமை இயக்குநர் வைஸ் அட்மிரல் அனுபம், நிகழ்ச்சியில் உரையாற்றும்போது, இந்த சக்கர நாற்காலி பிரமதாதமாக இருப்பதாக கூறியதுடன், இது மாற்றுத்திறனாளிகள், போரில் கால்கள் பாதிக்கப்பட்ட ராணுவத்தினர் உள்ளிட்டோருக்கு சிறந்த பயனை தரும் என்றார்.

சென்னை ஐஐடியில் ஏராளமான புதிய கண்டுபிடிப்புகள், தொழில்நுட்பங்கள் உருவாக்கப்பட்டு வருகின்றன என்று புகழாரம் சூட்டியவர், புதிய கண்டுபிடிப்புகள் அனைத்து தரப்பு மக்களுக்கும் குறிப்பாக கிராமப்புற மக்கள், தொலைதூர பகுதியில் வசிப்போருக்கு பயன்பட வேண்டும் என்பதையும் சுட்டிக்காட்டினார்.
நிகழ்ச்சியில் பேசிய சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி சக்கர நாற்காலிகளின் எடை பொதுவாக 17 கிலோ அளவில் இருக்கும் என்பதால் பயனாளிகள் சற்று சிரமப்படுவர் என்றும் ஐஐடி உருவாக்கியுள்ள சக்கர நாற்காலியின் எடை 8.5 கிலோ மட்டுமே உள்ளது என்றும் குறிப்பிட்டார்.
“குறைந்த எடையில், உலகத் தரத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இது உறுதியானது, பாதுகாப்பானது. இதுபோன்ற சக்கர நாற்காலிகளை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்ய ரூ.2.40 லட்சம் செலவாகும். ஆனால், ஐஐடியின் சக்கர நாற்காலி ரூ.75 ஆயிரத்துக்கு கிடைக்கும்,” என்றார் திரு காமகோடி.
ஐஐடி துளிர் நிறுவனமான ‘த்ரைவ் மொபிலிட்டி’ நிறுவனம் இந்த சக்கர நாற்காலிகளை வணிக ரீதியில் தயாரிக்க உள்ளது. இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தமும் கையெழுத்தாகி உள்ளது.