சென்னை: தமிழ்நாட்டில் 2026ல் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு கூட்டணி ஆட்சி  அமையும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ள மூத்த காங்கிரஸ் தலைவர் திருச்சி வேலுச்சாமி, அந்த ஆட்சியில், காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 2 பேர் அமைச்சர்களாக பதவி வகிப்பார்கள் என்று தெரிவித்துள்ளார். இது திமுக கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

2026 சட்டமன்ற தேர்தலையொட்டி, தமிழக அரசியல் களம் இப்போதே பரபரப்பு அடைந்துள்ளது. ஆட்சியை தக்க வைத்துள்ள திமுக தலைமை  தேர்தல் பணிகளை முன்னெடுத்துள்ள நிலையில், ஆட்சியை மீண்டும் கைப்பற்ற அதிமுக, பாஜக கூட்டணியும் தீவிரமாக களப்பணியாற்றி வருகிறது. இதற்கிடையில், புதிதாக கட்சி தொடங்கி உள்ள நடிகர் விஜய், தனது கட்சி தலைமையில் கூட்டணி ஆட்சி என்றும், கூட்டணி கட்சியனிருக்கு ஆட்சியில் பங்கு என கொளுத்தி போட்டுள்ளார். இது அரசியல் களத்தில் கொளுந்துவிட்டு எரிகிறது.

திமுக, அதிமுக கூட்டணியில் உள்ள சிறுசிறு கட்சிகளும் தங்களுக்கும் அமைச்சர் பதவி வேண்டும் என போர்க்கொடி தூக்கி உள்ளன. அதன் முன்னோட்டமாக திமுக கூட்டணியில் உள்ள கட்சிகள், தங்களுக்கு இந்த முறை அதிக எண்ணிக்கையிலான இடங்கள் ஒதுக்க வேண்டும் என ஒப்பனாக பேசி வருகின்றன.

இந்த நிலையில், திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சியின் மூத்த தவைரான திருச்சி வேலுச்சாமி, தமிழ்நாட்டில் 2026-ல் கூட்டணி ஆட்சி அமையும் என்றும் அப்போது,  காங்​கிரஸ் கட்​சி​யைச் சேர்ந்த 2 பேர் அமைச்​சர்களாக இருப்​பார்​கள்’ என்று தெரிவித்துள்ளார்.

 திருச்​சி​யில் காமராஜர் பிறந்த நாள் விழா மற்​றும் அரசி​யல் அமைப்பை காப்​போம் விளக்க பொதுக் கூட்​டம் திருச்சியை அடுத்த  மணப்​பாறை​யில் இரவு நடை​பெற்​றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றிய காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளரான,  திருச்சி வேலுச்​சாமி  பேசும்போது,    தமிழக முதல்​வ​ராக காம​ராஜர் இருந்​த​போது 1954-ல் பட்​டியல் இனத்​தைச் சேர்ந்​தவரை அறநிலை​யத் துறை அமைச்​ச​ராக்கி வரலாறு படைத்​தார்.

தமிழகத்​தின் முடிசூடாமன்​ன​னாக முதல்​வ​ராக இருந்​தவர் காம​ராஜர். இரு இந்​தி​யப் பிரதமர்​களை உரு​வாக்​கிய​வர். ஆனால், அவர் உயி​ரிழக்​கும்​போது 100 ரூபாய் கூட அவரிடம் இல்​லை. அவரைத்​தான் வரலாறு பேசுகிறது.

கன்​னி​யாகுமரி முதல் காஷ்மீர் வரை‌, அசாமில் இருந்து குஜ​ராத்வரை குறுக்​கும் நெடுக்​கு​மாக தன்பாதத்​தாலேயே அழகு பார்த்த ராகுல்​காந்​தியை பிரதம​ராக்​கி​னால் நமது வாழ்க்கை பாது​காக்​கப்​படும்.

தமிழகத்​தில் காங்​கிரஸும் ஆட்​சிக்கு வரவேண்​டும் என்​பது​ தான் நமது குறிக்​கோள். இதற்கு முன்​னர் எப்​படி வேண்​டு​மா​னாலும் இருந்​திருக்கலாம். ஆனால், காங்கிரஸ் கட்​சியின் கவுர​வத்துக்கு இழுக்கு வராத ​நிலையில் நமது கூட்டணி இருக்கும். அடுத்த ஆண்டு தமிழகத்​தில் நடை​பெற உள்ள சட்​டப்​பேர​வைத் தேர்​தலில் கூட்​டணி ஆட்சி தான் அமை​யும். அப்​போது காங்​கிரஸ் கட்​சி​யைச் சேர்ந்த 2 பேர் அமைச்​சர்​களாக இருப்​பார்​கள்.

முதலில் தமிழகத்​தில் ஆட்​சிக்கு வரு​வோம். பிறகு மத்​தி​யில் ஆட்சிக்கு வரு​வோம். இவ்​வாறு அவர் பேசி​னார்.

ஏற்கனவே அதிமுக கூட்டணியில் இணைந்துள்ள பாஜக, தமிழகத்​தில் அதி​முக-​பாஜக கூட்​டணி ஆட்​சி​தான் அமை​யும் என கூறி வருகிறது. இதை நேரிடையாக மறுக்க முடியாத அதிமுக, அதிமுக முழு பலத்துடன் ஆட்சி அமைக்கும் கூறி வருகிறது.  இந்த நிலையில்,  திமுக கூட்ட​ணி​யில் அங்​கம் வகிக்​கும் காங்​கிரஸ் கட்​சி​யின் மாநில நிர்​வாகி​யான திருச்சி வேலுச்​சாமி​யும், அடுத்து கூட்​டணி ஆட்​சி​தான் அமை​யும் என்று கூறி​யிருப்​பது அரசி​யலில் பரபரப்பை ஏற்​படுத்​தி​யுள்​ளது.