டெல்லி: 7 வயதைக் கடந்த குழந்தைகளின்  ஆதாரை புதுப்பிக்க ஆதார் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி, 7 வயது குழந்தைகளின் ஆதாரில் பயோமெட்ரிக் விவரங்களைப் புதுப்பிக்க வேண்டும் இல்லையேல், அந்த ஆதார் கார்டுகள் முடக்கப்படும் என்று யுஜடிஏஐ (இந்திய தனித்துவ அடையாள ஆணையம்) தெரிவித்துள்ளது.

ஏழு வயது குழந்தைகளுக்கு கட்டாய பயோமெட்ரிக் புதுப்பிப்பை UIDAI கோருகிறது. இது ஆதாரின் கீழ் ஏற்கனவே உள்ள தேவையாகும், மேலும் பெற்றோர்கள் அல்லது பாதுகாவலர்கள் தங்கள் குழந்தையின் விவரங்களை எந்த ஆதார் சேவா கேந்திரா அல்லது நியமிக்கப்பட்ட ஆதார் மையத்திலும் புதுப்பிக்கலாம் என தெரிவித்துள்ளது.

தற்போது பள்ளிகளில் குழந்தைகளை சேர்க்ககூட ஆதார் கட்டாயமாக்கப்பட்டு உள்ளது. இதன் காரணமாக, குழந்தைகளுக்கும் ஆதார் கார்டு வழங்கப்பட்டு வருகிறது.  5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு பால் ஆதார் கார்டு எனும் நீல  நிற ஆதார் அட்டை வழங்கப்பட்டு வருகிறது. மற்றவர்களுக்கு வெள்ளை நிற ஆதார் கார்டு வழங்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில்,  ஏழு வயதுக்கு மேற்பட்ட குழந்தைகள், குழந்தைகளுக்கான புளூ  (நீலளம்) நிற ஆதார் கார்டுகளை பயன்படுத்தி வந்தால் தங்களது தகவல்களை உடனடியாக புதுப்பிக்க வேண்டும் என்று யுஐடிஏஐ தெரிவித்துள்ளது.

அதன்படி,   5 வயது பூா்த்தியடையும் முன்பு ஆதாா் அட்டை பெற்ற குழந்தைகள், 7 வயதைக் கடந்த பின்னரும் தங்களது கைரேகை, கருவிழி, புகைப்படம் போன்ற ‘பயோமெட்ரிக்’ விவரங்களைப் புதுப்பிக்காவிட்டால் அவா்களின் ஆதாா் முடக்கப்பட வாய்ப்புள்ளதாக இந்திய தனித்துவ அடையாள ஆணையம் தெரிவித்துள்ளது.

அங்கீகரிக்கப்பட்ட ஆதார் மையங்களில் குழந்தைகளின் தகவல்களைப் புதுப்பிக்கலாம். 5 முதல் 7 வயது வரையிலான குழந்தைகளின் ஆதார் பயோமெட்ரிக்ஸை இலவசமாகப் புதுப்பித்துக் கொள்ளலாம். அதேபோல, ஐந்து வயதுக்கு உட்பட்ட குழந்தையின் புகைப்படம், பெயர், பிறந்த தேதி, முகவரி உள்ளிட்ட ஆவணங்களை ஆதாரில் இணைக்கலாம் என அறிவித்துள்ளதுட.

அத்துடன்,  7 வயதுக்குப் பிறகு புதுப்பிக்கப்படும் ஆதாருக்கு கட்டணமாக 100 ரூபாய் செலுத்த வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளது.

தங்களது ஆதார் விவரங்களை புதுப்பிக்காத குழந்தைகளின் பெற்றோருக்கு,   ஆதாா் அட்டைகளில் குறிப்பிடப்பட்டுள்ள கைப்பேசி எண்களுக்கு, ஆதார் புதுப்பிக்கக் கோரி யுஐடிஏஐ குறுஞ்செய்திகளை அனுப்பி வருவதாக தெரிவித்துள்ள ஆதார் ஆணையம்,  உடனே பெற்றோர்கள் தங்களது குழந்தைகளின் ஆதார் விவரங்களை புதுப்பிக்க வலியுறுத்தி உள்ளது.

 இதுகுறித்து இந்திய தனித்துவ அடையாள ஆணையம்  (ஆதார் ஆணையம் UDAI) வெளியிட்ட செய்திக் குறிப்பில்.  5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளின் புகைப்படம், பெயா், பிறந்த தேதி, பாலினம், முகவரி மற்றும் பிற ஆவணங்களை சமா்ப்பித்து ஆதார் பெறப்படுகின்றது. அப்போது அந்தக் குழந்தைகளின் கைரேகை மற்றும் கருவிழி பதிவுகள் போன்றவை பெறப்படுவதில்லை.

குழந்தைகள் 5 வயது பூா்த்தி செய்தவுடன் ஆதாரில் அவா்களின் கைரேகை, கருவிழிகள் மற்றும் புகைப்படத்தைப் பதிவேற்றம் செய்வது கட்டாயமாகும். இதுவே முதல் கட்டாய பயோமெட்ரிக் புதுப்பிப்பு (எம்பியு) என்று கூறப்படுகிறது.

5 வயது முதல் 7 வயது வரை இலவசமாகவே ஆதாரைப் புதுப்பித்துக் கொள்ள முடியும். 7 வயதுக்கு மேல் ஆதாரை புதுப்பிப்பிக்க கட்டணமாக 100 ரூபாய் வசூலிக்கப்பட்டு வருகிறது. 7 வயதைக் கடந்த பின்னும் குழந்தைகளின் ‘பயோமெட்ரிக்’ விவரங்களை புதுப்பிக்காவிட்டால் அவா்களின் ஆதாா் முடக்கப்பட வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.