டில்லி: ”காமராஜ் பிறந்த நாளில் அவருக்கு மரியாதை செலுத்துகிறேன்” என பிரதமர் மோடி சமூக வலைதளத்தில் தமிழில் பதிவிட்டுள்ளார். காங்கிரஸ் தலைவர் கார்கேவும் புகழாரம் சூட்டியுள்ளார்.

பெருந்தலைவர் காமராஜரின் 123ஆண்டு பிறந்த தினம் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நிலையில், பிரதமர் மோடி, காமராஜரை புகழ்ந்து தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

அதில்,   காமராஜ் பிறந்த நாளில், அவருக்கு மரியாதை செலுத்துகிறேன். இந்தியாவின் சுதந்திரப் போராட்டத்தில் முன்னணியில் இருந்த அவர், சுதந்திரத்திற்குப் பிந்தைய நமது பயணத்தின் வளர்ச்சிக்குரிய ஆண்டுகளில் விலைமதிப்பற்ற தலைமைத்துவத்தை வழங்கினார். அவரது உயரிய சிந்தனைகளும், சமூக நீதி குறித்த உறுதிப்பாடும் நம் அனைவருக்கும் மகத்தான ஊக்கமளிக்கும்.

இவ்வாறு பிரதமர் மோடி கூறியுள்ளார்.

காங்கிரஸ் தலைவர் கார்கே  வெளியிட்டுள்ள அறிக்கையில்,   சுதந்திர இயக்கத்தின் உயர்ந்த மனிதர்களில் ஒருவரும், முன்னாள் காங்கிரஸ் தலைவரும், பாரத ரத்னா விருது பெற்றவருமான காமராஜர், சமூக நீதிக்கான அயராத போராளியாக இருந்தார். அவரது தொலைநோக்கு பார்வை கொண்ட மதிய உணவுத் திட்டம், தடைகளைத் தகர்த்தெறிந்து, பின்தங்கியவர்களுக்கு கல்வியை எட்டக்கூடியதாக மாற்றும் ஒரு சக்திவாய்ந்ததாக இருந்தது.

தேசத்தைக் கட்டியெழுப்புவதில் அவரது மாற்றத்தை ஏற்படுத்தும் தாக்கம் இந்தியாவின் முன்னேற்றப் பயணத்தில் அழியாத முத்திரையைப் பதித்துள்ளது.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.