டெல்லி: ஹரியானா, கோவா மாநிலங்களுக்கு ஆளுநர்களும், லடாக் யூனியன் பிரதேசத்துக்கு துணைநிலை ஆளுநர் நியமனம் செய்து குடியரசு தலைவர் திரவுபதி முர்மு உத்தரவிட்டுள்ளார்.

லடாக் யூனியன் பிரதேசத்தின் துணை நிலை ஆளுநர் பிரிகேடியர் (டாக்டர்) பி.டி. மிஸ்ரா (ஓய்வு) ராஜினாமா கடிதத்தை குடியரசுத் தலைவர் ஏற்றுக்கொண்டார். அதற்கு பதிலாக புதிய ஆளுநர் நியமனம் செய்யப்பட்டு உள்ளனர்.
இந்திய குடியரசு தலைவர் திரவுபதி முர்மு, 3 மாநிலங்களுக்கான கவர்னரை நியிமித்து அறிவிப்பு வெளியிட்டுள்ளார். லடாக் யூனியன் பிரதேச துணை நிலை ஆளுநர் பி.டி. மிஸ்ராவின் ராஜினாமா ஏற்கப்பட்டு புதிய துணை நிலை ஆளுநராக கவிந்தர் குப்தா நியமிக்கப்பட்டுள்ளார்.
ஹரியானா மாநில ஆளுநராக அசிம் குமார் கோஷ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
கோவா மாநில ஆளுநராக அசோக் கஜபதி ராஜு நியமிக்கப்பட்டுள்ளார்.
இதுகுறித்து மத்தியஅரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், பின்வரும் ஆளுநர் / துணை நிலை ஆளுநர்களை குடியரசுத் தலைவர்நியமனம் செய்துள்ளார்:-
(i) ஹரியானா மாநில ஆளுநராக பேராசிரியர் ஆஷிம் குமார் கோஷ்
நியமிக்கப்பட்டுள்ளார்.
(ii) கோவா மாநில ஆளுநராக திரு பூசாபதி அசோக் கஜபதி ராஜு
நியமிக்கப்பட்டுள்ளார்.
(iii) லடாக் யூனியன் பிரதேசத்தின் துணைநிலை ஆளுநராக திரு கவிந்தர் குப்தா நியமிக்கப்பட்டுள்ளார்.
மேற்கண்ட ஆளுநர் / துணை நிலை ஆளுநர்களின் நியமனங்கள் அந்தந்த அலுவலகங்களில் அவரவர்கள் பொறுப்பேற்கும் தேதிகளிலிருந்து அமலுக்கு வரும்.
இவ்வாறு கூறப்பட்டுள்ளது.