டெல்லி
பிரபல நடிகை சரோஜா தேவி மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்,

சுமார் 87 வயதான பழம்பெரும் நடிகை நடிகை சரோஜா தேவி வயது முதிர்வு காரணமாக பெங்களூருவில் நேற்று காலமானார். சரோஜா தேவி மறைவுக்கு சினிமா துறையை சேர்ந்தவர்களும், அரசியல் தலைவர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
சரோஜா தேவியின் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்து எக்ஸ் தளத்தில்
“பிரபல திரைப்பட ஆளுமை பி. சரோஜா தேவியின் மறைவால் வருத்தம் அடைந்தேன். இந்திய சினிமா மற்றும் கலாச்சாரத்தின் ஒரு சிறந்த சின்னமாக அவர் நினைவுகூரப்படுவார். அவரது பன்முகத்தன்மை கொண்ட நடிப்புகள் தலைமுறை தலைமுறையாக ஒரு அழியாத அடையாளத்தை விட்டுச் சென்றன. அவரது குடும்பத்தினருக்கும் ரசிகர்களுக்கும் எனது இரங்கல்.”
என்று பதிவிட்ட்டுள்ளார்.