மலேசியாவின் சிலாங்கூர் குடிநுழைவுத் துறை மேற்கொண்ட அதிரடி நடவடிக்கையில் சட்டவிரோதமாக குடியேறிய 24 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதில் பெரும்பாலானோர் இந்தியர்கள் என்றும் தவிர, இலங்கை மற்றும் மியான்மர் நாட்டைச் சேர்ந்தவர்களும் கைது செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது.

கிள்ளான் மற்றும் ஷா ஆலமைச் சுற்றியுள்ள மூன்று வெவ்வேறு இடங்களில் மேற்கொள்ளப்பட்ட இந்த சோதனையில் பாஸ்போர்ட் மற்றும் விசா இல்லாமல் தங்கியவர்கள் பிடிபட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்டவர்கள் மீது குடியேற்றச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதையடுத்து மாநிலம் முழுவதும் இதுபோன்ற தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று சிலாங்கூர் குடிவரவுத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Patrikai.com official YouTube Channel