தைவான் வான் எல்லைக்குள் சீன போர் விமானங்கள் அத்துமீறி நுழைந்ததாகத் தைவான் தேசிய பாதுகாப்பு அமைச்சகம் (MND) தெரிவித்துள்ளது.

திங்கட்கிழமை காலை 6 மணி நிலவரப்படி (உள்ளூர் நேரம்) தைவானைச் சுற்றி 17 சீன இராணுவ விமானங்கள் மற்றும் கடற்படைக் கப்பல்கள் காணப்பட்டதாக MND தெரிவித்தது.

17 விமானங்களில் 7 விமானங்கள் மையக் கோட்டைக் கடந்து தைவானின் வடக்கு, தென்மேற்கு மற்றும் கிழக்கு வான் பாதுகாப்பு அடையாள மண்டலங்களுக்குள் நுழைந்தாகக் கூறப்படுகிறது.

சீனாவின் அத்துமீறலுக்கு பதிலளிக்க, தைவானின் ஆயுதப் படைகள் போர் விமானங்கள், போர்க்கப்பல்கள் மற்றும் கடலோர ஏவுகணை அமைப்புகளை நிலைநிறுத்தின.

மேற்கு பசிபிக் பகுதியில் தனது ஆதிக்கத்தை விரிவுபடுத்துவதன் மூலமும் தைவானை சீனாவுடன் இணைக்கும் நோக்கிலும் சீனா தொடர்ந்து போர் விமானங்கள் மற்றும் போர்க்கப்பல்களுடன் அத்துமீறி வருவதாக தைவான் அதிபர் லாய் சிங்-டே குற்றம்சாட்டியுள்ளார்.