சென்னை: திருத்தணி முருகன் கோவிலுக்கு மாற்றுப்பாதை ரூ.54 கோடி செலவில் அமைக்கப்பட இருப்பதாக அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.

திருச்செந்தூர், திருபரங்குன்றம் உள்பட பல கோவில்களில் கும்பாபிஷேகம் நடைபெற்றுள்ள நிலையில், ஈரோடு திண்டல் வேலாயுத சாமி கோவிலில் ஆசியாவிலேயே மிக உயரமான முருகன் சிலை அமைப்பது குறித்து அமைச்சர்கள் சேகர்பாபு, முத்துசாமி ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர்.
பின்ர், செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சேகர்பாபு, திருச்செந்தூர் கோயிலில் 414 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 75 சதவீத திருப்பணிகள் நிறைவடைந்துள்ளதாகவும், மீதமுள்ள பணிகள் செப்டம்பர் அல்லது நவம்பர் மாதங்களில் நிறைவடையும் எனவும் கூறினார்.
மேலும், சுவாமிமலை, மருதலை ஆகிய கோயில்களில் மின்தூக்கி அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றவர், திருத்தணி முருகன் கோவிலுக்கு ஆந்திர மாநில பக்தர்கள் அதிகளவில் வருவதால், மாற்று பாதை உருவாக்க 54 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக, அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார்.