டெல்லி

பிரபல பாட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவால் தனது கணவர் பருபள்ளி காஷ்யப் பை விவாகரத்து செய்ய உள்ளார்/

இந்தியாவின் பிரபல பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவால் மற்றும் பருபள்ளி கஷ்யப் இருவரும் டிசம்பர் 2018 இல் திருமணம் செய்து கொண்டனர், சுமார் 14 ஆண்டுகள் காதலித்து 7 ஆண்டுகால திருமண வாழ்க்கைக்குப் பிறகு இந்த உறவு முறிந்துள்ளது. இது குறித்து சாய்னா நேவால் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு பதிவைப் பகிர்ந்துள்ளாஆற்

சாய்னா நேவால் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில்,

‘வாழ்க்கை சில நேரங்களில் நம்மை வெவ்வேறு திசைகளில் அழைத்துச் செல்கிறது. நிறைய யோசித்த பிறகு, பருபள்ளி கஷ்யப்பும் நானும் பிரிந்து செல்ல முடிவு செய்துள்ளோம். எங்களுக்கும் ஒருவருக்கொருவருக்கும் அமைதி, வளர்ச்சி மற்றும் நல்வாழ்வைத் தேர்வு செய்கிறோம். அந்த நினைவுகளுக்கு நான் நன்றியுள்ளவளாக இருக்கிறேன், மேலும் எதிர்காலத்திற்கு வாழ்த்துகிறேன்.’

எனப் பதிந்துள்ளார்

சாய்னாவின் இந்தப் பதிவு சமூக ஊடகங்களில் மிக வேகமாகப் பரவி வருகிறது.