மதுரை
இன்று காலை 7.30 மணி முதல் திருப்பரங்குன்றம் கோவிலில் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள்

இன்று தமிழ் கடவுள் முருகனின் அறுபடை வீடுகளில் முதல் படை வீடான திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் 14 ஆண்டுகளுக்கு பிறகு குடமுழுக்கு நடைபெற்றுள்ளது.
இன்று அதிகாலை 5:25 மணி முதல் 6.15 மணிக்குள் திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றுள்ளது.
எனவே கோவில் குடமுழுக்கு நடைபெற்ற பின் காலை 7.30 மணி முதல் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள் என்று திருப்பரங்குன்றம் முருகன் கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
மேலும், இன்றும் (14ம் தேதி), நாளையும் (15ம் தேதி) கட்டண தரிசனம் முழுமையாக ரத்து செய்யப்படுவதாகவும் கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.