டெல்லி

டுத்த மாதம் முதல் அத்தியாவசிய பொருட்கள் விலை குறைய வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது

 

இந்தியாவில் ஜிஎஸ்டி அமல்படுத்தி 8 ஆண்டுகள் ஆகி விட்ட நிலையில், தற்போது அத்தியாவசிய பொருட்களின் வரி விகிதத்தை மத்திய அரசு குறைக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அதாவது ஜிஎஸ்டி கவுன்சிலின் 56வது கூட்டத்தில் வரிக் குறைப்பு ஏற்படலாம் என சொல்லப்படுகிறது.

அதன்படி 12% வரம்பில் உள்ள நெய், வெண்ணெய், பதப்படுத்தப்பட்ட உணவுகள், மொபைல் போன்கள், பழரசங்கள், ஊறுகாய், ஜாம், குடைகள், சைக்கிள், டூத்பேஸ்ட், ஷூ, ஆடைகள் போன்ற அத்தியாவசிய பொருட்கள் 5% அல்லது 0% வரம்பிற்குள் கொண்டு வரப்பட இருப்பதாக கூறப்படுகிறது.

தற்போது 28 சதவீத வரம்பில் உள்ள ஏசி உள்ளிட்ட பொருட்களும் குறைவான வரம்பிற்கு கொண்டு வரப்பட உள்ளதால் ஏழை மற்றும் நடுத்தர மக்கள் பயனடைவார்கள். காப்பீட்டு திட்டங்களுக்கான ஜிஎஸ்டியை 18ல் இருந்து 12 சதவீதமாக குறைக்க நிறுவனங்கள் சம்மதித்துள்ளதால், இதை பூஜ்ஜிய வரம்புக்குள் கொண்டு வரலாம்.

[youtube-feed feed=1]