திருப்பதி

ந்திரப்பிரதேச அரசு 590 வேத பண்டிதர்களுக்கு ரூ, 3000 உதவித்தொகை வழங்க உள்ளது/

நேற்று திருப்பதி திருமலையில் நடந்த ஆந்திர மாநில ஐந்து சமய அறநிலையத்துறை  அதிகாரிகள் கூட்டத்தில் மாநில அறநிலைய துறை அமைச்சர் ஆனம் ராம்நாராயண ரெட்டி, தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் பி.ஆர். நாயுடு ஆகியோர் கலந்துக் கொண்டனர்.

கூட்டத்த்தில் அமைச்சர் ஆனம் ராம்நாராயண ரெட்டி

“முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் உத்தரவின் பேரில், வேதம் படித்து வேலை தேடும் இளம் வேதபண்டிதர்கள் மாநிலத்தில் 590 பேர்உள்ளனர். இவர்களுக்கு மாதந்தோறும் ஊக்கத்தொகையாக ரூ.3000 வழங்கப்பட உள்ளது. திருப்பதி ஸ்ரீவாணி அறக்கட்ட ளைக்கான நிதியில் விஜயவாடா கனகதுர்க்கையம்மன் கோயி லுக்கு செல்ல மேலும் இரு வழி சாலைகள் அமைக்க நிதிஒதுக்கும்படியும் திருப்பதி தேவஸ்தானத்தை கேட்டுள்ளோம்.

திருப்பதி தேவஸ்தானத்தில் இன்னமும் வேற்று மதத்தினர் பணியாற்றி வருவதாக வரும் செய்திகளில் உண்மை உள்ளது. இது தொடர்பாக விசாரணை நடத்தவும் உத்தரவிடப்பட் டுள்ளது.திருப்பதி தேவஸ்தானத்தின் சார்பில் நடத்தப்படும் பள்ளிகள், கல்லூரிகளில் காலியாக உள்ள 192 பணியிடங்களை நிரப்பவும் அரசு அனுமதி வழங்கி உள்ளது.

என உரையாற்றி உள்ளார்.