ராமேஸ்வரம்
இலங்கை கடற்படையினர் 7 ராமேஸ்வரம் மீனவர்களை கைது செய்துள்ளனர்

தொடர்ந்து தமிழகத்தை சேர்ந்த மீனவர்களை எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினர் சிறைபிடிக்கும் சம்பவம் நடந்து வருகிறது. இவ்வாறு மீனவர்கள் கைது செய்யப்படுவதை நிறுத்தி வைக்க வேண்டும் என்று கோரிக்கைகள் வலுத்து வருகிறது.
ஆயினும், இலங்கை கடற்படையினர் கைது செய்யும் சம்பவம் மட்டும் தொடர்ந்து நடந்து கொண்டு வருகிறது.
நேற்று, எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி ராமேஸ்வரம் மீனவர்கள் 7 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்து, மீனவர்களின் விசைப்படகையும் பறிமுதல் செய்துள்ளனர். மீனவர்கள் முதற்கட்ட விசாரணைக்கு பின்னர் மன்னார் மீன்வளத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட உள்ளனர்.
Patrikai.com official YouTube Channel