திருவள்ளூர்

திருவள்ளூர் அருகே சரக்கு ரயில் ஒன்று தீப்பிடித்து எரிவதால் அரக்கோணம் மார்க்கத்தில் ரயில் சேவைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

திருவள்ளூர் அருகே எரிபொருள் ஏற்றி சென்ற சரக்கு ரெயிலில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. சென்னை துறைமுகத்தில் இருந்து எண்ணெய் ஏற்றிக்கொண்டு சென்ற சரக்கு ரெயில் திடீரென தடம் புரண்டதால் இந்த தீ விபத்து ஏற்பட்டதாக சொல்லப்படுகிறது.

இந்த தீ விபத்தால் அப்பகுதி முழுவதுமே புகை மண்டலம் போல காட்சியளிக்கிறது.  தீப்பிடித்த ரயிலில் எரிபொருட்கள் இருப்பதால் தீ மேலும் பரவும் என அஞ்சப்படுகிறது.  இது குறித்து தகவல் அறிந்தத்தும் விரைந்து வந்த தீ அணைப்புத்துறையினர் தீயை அணைக்க போராடி வருகிறார்கள்.

சுமார்10 க்கும் மேற்பட்ட தீ அணைப்பு வாகனங்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. விபத்தால் அரக்கக்கோணம் மார்க்கத்தில் ரெயில்கள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டு பயணிகள் கடும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர்.

இவ்வாறு அதிகாலையிலேயே ரயிலில் ஏற்பட்ட தீ விபத்து அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதுடன் ரயில்களும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன,