கனடாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் மீது 25% கூடுதல் வரி விதித்து கடந்த மார்ச் மாதம் அமெரிக்க அதிபர் டிரம்ப் உத்தரவிட்டிருந்தார்.

இந்த வர்த்த விவகாரம் தொடர்பான கடிதங்கள் எதையும் இதுவரை வழங்காமல் இருந்தார், மேலும் புதிய வரி விதிப்புகளை ஆகஸ்ட் 1 வரை நிறுத்திவைப்பதாகவும் அறிவித்திருந்தார்.

இந்த நிலையில் கனேடிய பிரதமர் மார்க் கார்னிக்கு நேற்று அனுப்பிய கடிதத்தில் ஆகஸ்ட் 1 முதல் கனடாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பல பொருட்களுக்கான வரிகளை 35% ஆக உயர்த்துவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

இதனால் இருநாடுகளுக்கும் இடையே பல ஆண்டுகளாக நீடித்து வந்த உறவில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

தவிர, மற்ற நாடுகளுக்கு 15 முதல் 20 சதவீதம் வரை வரிகளை உயர்த்த திட்டமிட்டுள்ளதாகவும் இது தொடர்பான கடிதங்கள் அந்தந்த நாடுகளுக்கு அனுப்பப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.

அமெரிக்க அதிபர் டிரம்பின் இந்த வரி விதிப்பு நடவடிக்கை உலக பொருளாதாரத்தில் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் இதனால் முதலீட்டாளர்கள் அச்சமடைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.