திருவாரூர்: இரண்டு நாள் பயணமாக திருவாரூரில் முகாமிட்டுள்ள முதலமைச்சர் ஸ்டாலின் நேற்று மாலை திருவாரூரில் 5 கி.மீ தூரம் நடந்து சென்று கலைஞர் சிலையை திறந்து வைத்தார். அப்போது சாலையின் இரு புறங்களிலும் ஏராளமான பொதுமக்கள் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.

திருவாரூரில் கள ஆய்வுக்காக இரண்டு பயணமாக இன்று சென்னையில் இருந்து ஜுலை 9ந்தேதி அன்று காலை புறப்பட்ட முதலமைச்சர் ஸ்டாலின் முற்பகல் திருச்சியில் நடைபெற்ற தனியார் கல்லூரி பவள விழாவில் பங்கேற்றார். இதையடுத்து, திருச்சியில் இருந்து புறப்பட்ட முதல்வர் ஸ்டாலின், நேற்று பகல், 1:30 மணிக்கு திருவாரூர் வந்து, காட்டூரில் அமைந்துள்ள கலைஞர் கோட்டத்தில் ஓய்வு எடுத்தார்.
பின்னர் மாலை அங்கிருந்து புறப்பட்ட முதல்வர், மாலை, 6:50 மணிக்கு, பவித்திரமாணிக்கத்தில் காரில் இருந்து இறங்கி சாலை பயணத்தை துவங்கினார். கும்பகோணம்-திருவாரூர் சாலையில், பவித்திரமாணிக்கத்தில் தொடங்கி தூர்காலயா ரோடு வழியாக தெப்பக்குளம் தெற்குவீதி, பனகல் சாலை, பழைய பேருந்து நிலையம் வழியாக 5 கி.மீ., தூரம் நடைபயணம் மேற்கொண்டு, பொதுமக்களை சந்தித்து குறைகளை கேட்டறிந்து மனுக்களை பெற்றுக்கொண்டார். அவரது பயணம் முக்கிய வீதிகள் வழியாக வந்து, நாகை – தஞ்சை பைபாஸ் சாலையை, நேற்று இரவு அடைந்தார்.
நாகை – தஞ்சை சாலையில் நிறுவப்பட்டுள்ள, மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின், முழு உருவ வெண்கல சிலையை திறந்து வைத்து மரியாதை செய்ார். இரவு திருவாரூர் , சன்னிதி தெருவில் உள்ள, அவரது வீட்டில் இரவு தங்கினார்.
திருவாரூர் வந்த தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை கண்ட பொதுமக்கள் இன்முகத்துடன் வரவேற்றார்கள். பெண்கள், பொதுமக்கள் அதிகளவில் ஆர்வத்துடன் கலந்துகொண்டு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களை பார்வையிட்டு மிகுந்த மகிழ்ச்சியடைந்தனர்.
