அமெரிக்க விமான நிலையங்களில் காலணிகளை சோதனை செய்வது நிறுத்தப்படுவதாக அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சர் கிரிஸ்டி நோம் (Kristi Noem) அறிவித்துள்ளார்.
2001ம் ஆண்டு பாரிஸ் நகரில் இருந்து மியாமி சென்ற அமெரிக்க ஏர்லைன்ஸ் விமானத்தில் பயணம் செய்த நபர் தனது ஷூவுக்குள் வெடிபொருட்களை மறைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

9/11 இரட்டை கோபுரம் தகர்க்கப்பட்ட சில மாதங்களில் நடைபெற்ற இந்த சம்பவத்தில் ஷூ பாமர் என்று வர்ணிக்கப்பட்ட ரிச்சர்ட் ரேட் என்பவர் கைது செய்யப்பட்டார்.
இதனைத் தொடர்ந்து 2006 முதல் அமெரிக்க விமான நிலையங்களில் காலணி சோதனை காட்டாயமாக்கப்பட்ட நிலையில் தற்போது அந்த விதிமுறை நீக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Patrikai.com official YouTube Channel