சென்னை: உடன்பிறப்பே வா’ – களம் 2026 நம்பிக்கை பன்மடங்கு பெருகுகிறது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

உடன் பிறப்பே வா’ என்ற தலைப்பில் முதலமைச்சர் ஸ்டாலின் தொகுதிவாரியாக கட்சியின் முக்கிய நிர்வாகிகளை அழைத்து பேசி வருகிறார். வாக்குச்சாவடியில் திமுக கூட்டணியை வெற்றி பெற வைப்பேன்- என் தொகுதி – வெற்றி தொகுதி என்ற உறுதிமொழியை அனைவரும் எடுத்துக் கொள்ளும் வகையில் செயல்பட வேண்டும் என திமுகவினருக்கு அறிவுரை கூறி உள்ளார்.
இந்த அறிவிப்பைத் தொடர்ந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அண்ணா அறிவாலயத்தில் தினந்தோறும் ‘உடன்பிறப்பே வா’ என தலைப்பில் கழக நிர்வாகிகளை சந்தித்து உரையாடி வருகிறார். இந்த சந்திப்பில் மாவட்ட செயலாளர்கள் மட்டுமல்லாது ஒன்றிய, நகர, பேரூராட்சி செயலாளர்களை தனித்தனியாக சந்தித்து பேசி வருகிறார்.
மதுரையில் நடைபெற்ற திமுக பொதுக்குழுக் கூட்டத்தில், ஜூன் முதல் வாரத்தில் இருந்து கழக நிர்வாகிகளை தொகுதி வாரியாக ஒன் டூ ஒன் சந்திக்க இருக்கிறேன். அப்போது நாம் இன்னும் விரிவாக பேசுவோம் என கழக தலைவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்து இருந்தார்.
இந்j நிலையில் உடன்பிறப்பே வா’ சந்திப்பு குறித்து, களம்2026 குறித்த நம்பிக்கை பன்மடங்கு பெருகுகிறது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூகவலைதள பதிவில், கழகத்தின் இரத்த நாளங்களான நிர்வாகிகளுடன் frank & open-hearted உரையாடல்களை ‘உடன்பிறப்பே வா’ நிகழ்வு சாத்தியப்படுத்தியுள்ளது! மனந்திறந்த உரையாடல்களால் உடன்பிறப்புகளைப் போலவே எனக்கும் புது உற்சாகம் பிறக்கிறது. களம் 2026 குறித்த நம்பிக்கை பன்மடங்கு பெருகுகிறது” என தெரிவித்துள்ளார்.