சென்னை: தமிழ்நாடு அரசு  4 சுங்க சாவடிகளில் வழியாக செல்லும் அரசு பேருந்துகளுக்கான சுங்கக்கட்டணம் ரூ. ரூ.276 கோடி ரூபாய் செலுத்தாமல் உள்ளதால், குறிப்பிட்ட 4 சுங்கக்சாவடிகள் வழியாக பேருந்து இயக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 தென் மாவட்ட தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள கப்பலூர், எட்டுர்வட்டம், சாலைப்புதூர் மற்றும் நாங்குநேரி ஆகிய 4 சுங்கச் சாவடிகளில், வரும் 10ம் தேதி முதல் அரசுப் பேருந்துகளை அனுமதிக்கக் கூடாது என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம், ரூ.276 கோடி சுங்கச்சாவடி கட்டணம் நிலுவையில் உள்ளதாகக் கூறி, கப்பலூர், எட்டுராவட்டம், சாலைப்புதூர் மற்றும் நாங்குநேரி ஆகிய நான்கு சுங்கச்சாவடிகள் வழியாக அரசுப் பேருந்துகளை இயக்கத் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.  வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதி, ஆனந்த் வெங்கடேஷ் ரூ.276 கோடி நிலுவைத் தொகையை செலுத்தாததால், மேற்கண்ட 4 சுங்கச்சாவடி நிறுவனங்கள்  அரசு பேருந்துகள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த உத்தரவினால், சுங்கச்சாவடிகளில் அசம்பாவிதங்கள் நடக்காமல் தடுக்க உரிய போலீஸ் பாதுகாப்பை வழங்க தமிழக டிஜிபி, தென் மண்டல ஐ.ஜி.க்கு சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்த வழக்கில் வருகிற 10ஆம் தேதி முதல் 4 சுங்கச் சாவடிகளில் அரசு பேருந்துகள் செல்ல நீதிமன்றம் தடைவிதித்து உத்தரவிட்டுள்ளது.