இன்டர்நெட் இல்லாமல் பயன்படுத்தக்கூடிய புதிய மெசஞ்சர் செயலியை ட்விட்டர் நிறுவனத்தின் இணை நிறுவனர் ஜாக் டோர்சி விரைவில் அறிமுகம் செய்ய உள்ளார்.

இணையம் இல்லாமல், செயற்கைக்கோள் இணைப்பு இல்லாமல், வைஃபை இல்லாமல் வேலை செய்யக்கூடிய இந்த புதிய மெசஞ்சர் செயலியை டோர்சி உருவாக்கியுள்ளதாக கூறப்படுகிறது.

பிட்சாட் (BitChat) என்று பெயரிடப்பட்டிருக்கும் இந்த P2P மெசஞ்சர் செயலி தற்போது, ​​ஆப்பிள் ஆப் ஸ்டோரில் சோதனை முறையில் மட்டுமே கிடைக்கிறது.

BitChat சோதனை முறையில் பலர் அரட்டை அடிக்கும் ஸ்கிரீன்ஷாட்கள் ஆன்லைனில் கவனத்தை ஈர்த்துள்ளன. கிரிப்டோகரன்சி செயலிகளில் பயன்படுத்தப்படும் தொழில்நுட்பத்தை மேம்படுத்துவதன் மூலம் இந்த புதிய செயலி கொண்டு வரப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இது மொபைல் போன்கள் மற்றும் பிற சாதனங்களில் புளூடூத் வழியாக P2P நெட்வொர்க் மூலம் ஒரு சாதனத்திலிருந்து மற்றொரு சாதனத்திற்கு இணைக்கப்படும் என்று கூறப்படுகிறது.

2022 ஆம் ஆண்டு எலான் மஸ்க் ட்விட்டரை வாங்கிய பிறகு ஜாக் ட்விட்டர் நிறுவனத்தில் இருந்து நீக்கப்பட்டார். தற்போது அவர்கள் உருவாக்கியுள்ள பிட் சாட் வெற்றி பெற்றால், அது தொழில்நுட்ப உலகில் ஒரு புதிய புரட்சியாக இருக்கும் என்று கூறப்படுகிறது.