கடலூர்: கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே பள்ளி வேன்மீது ரயில் மோதி பயங்கர விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் வேனில் பயணம் செய்த பள்ளி மாணவர்கள்  2 மாணவர்கள் பலியாகி உள்ள நிலையில் பலர் படுகாயம் அடைந்துள்ளனர்.

சிதம்பரம்  செம்மங்குப்பம் பகுதியில் தனியார் பள்ளி மாணவர்களை ஏற்றிச் சென்ற பள்ளி வேன், அங்கிருந்த ஆளில்லா ரயில்வே கேட்டை கடக்க முயன்றபோது, அந்த வழியாக வந்த ரயில் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் வேன் நொறுங்கியது. மாணவ மாணவிகளின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கம் இருந்தவர்கள் ஓடிவந்து அவர்களை மீட்டனர். மேலும் காவல்துறைக்கும் தகவல் அளிக்கப்பட்டது.

முதல் கட்ட விசாரணையில், பள்ளி வேனில் பயணம் செய்த 2 மாணவர்கள் உயிரிழந்துள்ளதாகவும் பலர் படுகாயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு வருவதாகவும் தகவல்கள் தெரிக்கின்றன.