இந்தோனேசியாவின் மவுண்ட் லெவோடோபி லக்கி-லக்கி எரிமலை வெடித்ததைத் தொடர்ந்து, அடர்த்தியான எரிமலை சாம்பல் தூண் போல் வானத்தில் எழுந்து நின்றதாகக் கூறப்படுகிறது.
திங்கட்கிழமை ஏற்பட்ட இந்த வெடிப்பால், எரிமலை சாம்பல் 18 கிலோமீட்டர் உயரத்துக்கு வானத்தில் எழுந்தது.

இதனால் அதனைச் சுற்றி உள்ள கிராமங்கள் முழுவதும் சாம்பல் படிந்துள்ளது. உயிரிழப்புகள் குறித்து உடனடி அறிக்கைகள் எதுவும் இல்லை.
ஜூன் 18 அன்று ஏற்பட்ட எரிமலை வெடிப்பை அடுத்து எரிமலையின் எச்சரிக்கை நிலையை அந்நாட்டின் புவியியல் நிறுவனம் மிக உயர்ந்த நிலைக்கு உயர்த்தியது.
கடந்த நவம்பரில் லெவோடோபி லக்கி-லக்கி மலை வெடித்ததில் குறைந்தது ஒன்பது பேர் கொல்லப்பட்டனர், டஜன் கணக்கானவர்கள் காயமடைந்தனர்.
1,584 மீட்டர் உயரமுள்ள இந்த மலை மார்ச் மாதத்திலும் வெடித்தது, ஆனால் எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை.
இந்தோனேசியாவில் உள்ள 120 எரிமலைகளில் புளோரஸ் திமூர் மாவட்டத்தில் உள்ள லெவோடோபி லக்கி-லக்கி மற்றும் லெவோடோபி பெரெம்புவான் ஆகியவை இரட்டை எரிமலை என்று அழைக்கப்படுகிறது.