சென்னை: இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் கட்டப்பட்டுள்ள 729 புதிய வீடுகளை முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைத்தார்.

சென்னை தலைமைச்செயலகத்தில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியின்போது, இ லங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் கட்டுப்பட்டுள்ள  புதிய வீடுகளை,  காணொளி மூலம் ஸ்டாலின் திறந்து வைத்தார்.   அதன்படி,  திருப்பூர், விழுப்புரம், சேலம், விருதுநகரில் 729 புதிய வீடுகள் திறந்து வைக்கப்பட்டுள்ளன. இதன் மொத்த மதிப்பு ரூ. 38.76 கோடி.