ரியோ டி ஜெனிரோ

பிரிக்ஸ் மாநாட்டில் 33 ஆவது பருவநிலை மற்றும் மாநாட்டை இந்தியா தலைமை ஏற்ரும் நடத்தும் என தீர்மானிக்கப்பட்டுள்ளது.

பிரேசில் நாட்டின் ரியோ டி ஜெனீரோ நகரில், 17-வது பிரிக்ஸ் உச்சி மாநாடு நடைபெறுகிறது. இதில், இந்தியா, ரஷியா, பிரேசில், தென்ஆப்பிரிக்கா உள்ளிட்ட உறுப்பு நாடுகள் கலந்து கொள்கின்றன. இதில் பங்கேற்பதற்காக, இந்தியா தரப்பில் பிரதமர் மோடி சென்றுள்ளார். பிரேசிலின் ஜனாதிபதி லுலா அழைப்பின்பேரில், அந்நாட்டுக்கு சென்ற பிரதமர் மோடி, பிரேசில் தலைநகர் பிரேசிலியாவில் அவரை சந்தித்து உரையாடுவார் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இந்த 17-வது பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் கூட்டறிக்கை ஒன்று வெளியிடப்பட்டது. இதில், பாரீஸ் ஒப்பந்தத்தின் நோக்கங்களை தொடருவது மற்றும் இலக்குகளை அடைவதற்கு தொடர்ந்து ஒற்றுமையாக ஈடுபாட்டுடன் செயல்படுவோம் என தெரிவிக்கப்பட்டது. அதில், பருவநிலை மாற்றம் போன்ற நம்முடைய பகிரப்பட்ட பூமிக்கும், வருங்காலத்திற்கும் விடப்பட்ட அச்சுறுத்தல்களுக்கான சவால்களை பற்றி பேசுவது முக்கியம். அதற்காக நாம் பன்முகத்தன்மையுடன் கூடிய உள்ளார்ந்த ஈடுபாட்டுடன் செயல்பட வேண்டும் என வலியுறுத்துகிறோம்.

ஐ.நா.வின் பருவநிலை மாற்றத்திற்கான கட்டமைப்பு உடன்படிக்கை மற்றும் பாரீஸ் ஒப்பந்தம் ஆகியவற்றின்படி அனைத்து நாடுகளும் உள்ளார்ந்த ஈடுபாட்டுடன் செயல்பட வேண்டும் என அழைப்பு விடப்படுகிறது. பிரேசிலின் பெலம் நகரில் நடைபெற கூடிய, இந்த ஆண்டிற்கான ஐ.நா.வின் பருவநிலை மாற்ற கட்டமைப்பு உடன்படிக்கைக்கான தலைமைக்கு நாம் முழு ஒத்துழைப்பையும் அளிப்போம் என தெரிவிக்கப்பட்டது.

இதேபோன்று, 2028-ம் ஆண்டுக்கான 33-வது பருவநிலை மாற்ற மாநாட்டை இந்தியா ஏற்று நடத்தும் என இந்த மாநாட்டில் அறிவிக்கப்பட்டது. அதனை நாங்கள் வரவேற்கிறோம் என பிரிக்ஸ் நாடுகளின் தலைவர்கள் தெரிவித்தனர். இதன்படி, ஐ.நா.வின் பருவநிலை மாற்ற கட்டமைப்பு உடன்படிக்கைக்கான 33-வது பருவநிலை மாற்ற மாநாட்டை இந்தியா தலைமையேற்று நடத்த உள்ளது.