டெல்லி: வக்ஃப் சொத்துக்கள், தணிக்கை மற்றும் கணக்குகள் போன்றவற்றின் போர்டல் மற்றும் தரவுத்தளம் குறித்த வக்ஃப் விதிகள் 2025 குறித்து மத்தியஅரசு அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.

வக்ஃப் சொத்துக்களை பதிவு செய்வதற்கான புதிய போர்ட்டலை ஜூன் 6 ஆம் தேதி மத்திய அரசு தொடங்கி உள்ள நிலையில்,  தற்போது  வஃபு விதிகளை மத்தியஅரசு வெளியிட்டுள்ளது.

வக்ஃப் சொத்துக்களின் போர்டல் மற்றும் தரவுத்தளம், அவற்றின் பதிவு முறை, தணிக்கை நடத்துதல் மற்றும் கணக்குகளை பராமரித்தல் போன்றவற்றைக் கையாளும் “ஒருங்கிணைந்த வக்ஃப் மேலாண்மை, அதிகாரமளித்தல், செயல்திறன் மற்றும் மேம்பாட்டு விதிகள், 2025” மத்திய அரசு ஜூலை 3 அன்று அறிவித்தது. வக்ஃப் சட்டத்தின்படி சேர்க்கப்பட்ட 1995 சட்டத்தின் பிரிவு 108B இன் கீழ் அதிகாரங்களைப் பயன்படுத்தி விதிகள் வகுக்கப்பட்டுள்ளன…

நாடு முழுவதும் முஸ்லிம்களின் தொண்டுப் பணிகளுக்கு அா்ப்பணிக்கப்படும் வக்ஃப் சொத்துகளை, மாநிலங்களில் வக்ஃப் வாரியங்கள் நிா்வகிக்கின்றன. இந்த நிலையில் ஒருங்கிணைந்த வக்ஃப் நிா்வாகம், அதிகாரமளித்தல், செயல்திறன் மற்றும் மேம்பாட்டு விதிமுறைகள் 2025-ஐ மத்திய அரசு அறிவித்துள்ளது. வக்ஃப் சட்டம் 1995-இன் 108பி பிரிவின் கீழ், இந்த விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன.

இந்த விதிமுறைகளின்படி, ஏற்கெனவே உள்ள வக்ஃப் சொத்துகளின் விவரங்களை தெரியப்படுத்துதல், புதிய வக்ஃப் சொத்துகளைப் பதிவு செய்தல், வக்ஃப் சொத்துகள் தொடா்பான கணக்குத் தணிக்கை அறிக்கையை வெளியிடுதல் உள்ளிட்ட பணிகளுக்கு வலைதளம் மற்றும் தரவுதளம் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த வலைதளம் மற்றும் தரவுதளத்தில் வக்ஃப் சொத்துகளை பதிவு செய்வதற்கு அந்தச் சொத்துகளின் கண்காணிப்பு மற்றும் நிா்வாகம், அதுதொடா்பான வழக்குகள், சச்சரவுகளுக்கு கிடைத்த தீா்வுகள் உள்ளிட்ட விவரங்கள் இருக்கும். வலைதளம் மற்றும் தரவுதளத்தில் வக்ஃப் சொத்துகளின் விவரங்களை பதிவேற்றம் செய்தல், அவற்றின் பதிவு, கணக்குகள் பராமரிப்பு, கணிக்குத் தணிக்கை, அந்தச் சொத்துகள் மற்றும் வக்ஃப் வாரியத்துடன் தொடா்புள்ள பிற செயல்பாடுகளை ஒழுங்காற்ற உதவும் வகையில், மத்திய அரசுடன் ஆலோசித்து அனைத்து மாநில அரசுகளும் பொறுப்பு அதிகாரியை நியமிக்க வேண்டும். அந்த அதிகாரி இணைச் செயலருக்கு குறையாத அந்தஸ்தில் இருக்க வேண்டும்.

வக்ஃப் சொத்துகளை நிா்வகிக்கும் முத்தவல்லிகள் தங்கள் கைப்பேசி அல்லது மின்னஞ்சல் மூலம் வலைதளம் மற்றும் தரவுதளத்தில் பதிவு செய்ய வேண்டும். கடந்த ஏப் 8-ஆம் தேதி வக்ஃப் திருத்தச் சட்டம் 2025 அமலுக்கு வந்தது. இந்தச் சட்டத்துக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட பல்வேறு மனுக்கள் மீதான தீா்ப்பை உச்சநீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.

இந்த நிலையில், வக்ஃப் நிா்வாக விதிமுறைகளை மத்திய அரசு அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

‘Umeed’ Portal: வக்ஃப் சொத்துக்களை பதிவு செய்ய புதிய இணையதளத்தை தொடங்குகிறது மத்தியஅரசு