மதுரை: மதுரை மேலூர் அருகே இளம்பெண் ஒருவர் தனது காதலன் மற்றும் அவரது நண்பர்களால் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக காதலன் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள கிராம பகுதியை சேர்ந்த 20 வயதுடைய பெண்ணுக்கும், அதே பகுதியை சேர்ந்த தீபன்ராஜ் (வயது 25) என்பவரும் இடையே காதல் மலர்ந்துள்ளது. இதையடுத்து, இருவரும் அடிக்கடி வீட்டுக்கு வெளியே தனிமையில் சந்தித்து தங்களது காதலை வளர்த்து வந்தனர்.
இந்த நிலையில் காதலன் தீபன்ராஜ், தனது காதலியிம் பேச வேண்டும் என கூறி இரவு நேரத்தில் தனியாக வருமாறு அழைத்துள்ளார். இதை நம்பி அந்த பெண்ணும், இரவு நேரத்தில் வீட்டிற்கு தெரியாமல் காதலனை சந்திக்க சென்றுள்ளார். அந்த பெண்ணை தீபன்ராஜ் அழைத்து கொண்டு அருகில் உள்ள மற்றொரு கிராமத்திற்கு சென்றுள்ளார். அங்கு அந்த காதலியிடம், தீபன்ராஜ் திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி காதலியை வலுக்கட்டாயமாக பாலியல் வன்கொடுமை செய்ததாக தெரிகிறது. இதை தீபன்ராஜ் தனது நண்பர்கள் சிலருக்கு போன் மூலம் கூறி, அழைப்பு விடுத்துள்ளார்.
இதையடுத்து அங்கு வந்த தீபன்ராஜ் நண்பர்கள் திருமாறன் (22), மதன் (20) ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து அந்த பெண்ணை வன்புணர்வு செய்துள்ளனர். பின்னர் 3 பேரும் சேர்ந்து கூட்டு இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது. அவர்களிடம் இருந்து தப்பிக்க முயற்சித்தும் முடியாமல் இளம்பெண் மயக்கமடைந்துள்ளார். இதையடுத்து அவர்கள் 3 பேரும் அங்கிருந்து தப்பினர்.
பின்னர் கண்விழித்த இளம்பெண், தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து கண்ணீருடன் மேலவளவு போலீசில் புகார் செய்தார். புகாரை பதிவு செய்த காவல்துறையினர், அதை மேலூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்திற்கு மாற்றினர். இதையடுத்து புகாரின் பேரில் வழக்கை பதிவு செய்த இன்ஸ்பெக்டர் காஞ்சனமாலா, மேலவளவு சப்-இன்ஸ்பெக்டர் பிரகாஷ், தனிப்பிரிவு ஏட்டு தினேஷ்குமார் ஆகியோர் இளம்பெண்ணை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்தவர்களை தேடினார். அவர்கள் வீட்டில் ஹயாராக இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து அங்கு வந்த காவல்துறையினர், அவர்கள் 3 பேரையும் பிடித்து காவல்நிலையம் அழைத்து சென்றனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், அவர்கள பாலியல் வன்புணர்வு செய்தது உறுதி செய்யப்பட்டது.
இதைத்தொடர்ந்து இளம்பெண்ணின் காதலனி தீபன்ராஜ், திருமாறன், மதன் ஆகிய 3 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.