பிரான்ஸில் விமானப் போக்குவரத்து ஊழியர்கள் வேலை நிறுத்தம் மேற்கொண்டு வருவதை அடுத்து 170 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.
ரியான் ஏர் விமான போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதால் இங்கிலாந்து, கிரீஸ், ஸ்பெயின் உள்ளிட்ட உலகின் பல்வேறு நாடுகளுக்குச் செல்லும் 30,000க்கும் மேற்பட்ட பயணிகள் பாதிக்கப்படுவார்கள் என்று கூறப்படுகிறது.

ஐரோப்பாவின் மிகப்பெரிய விமான சேவை நிறுவனமான ரியான் ஏர் நிறுவனத்தின் சேவையை 40 சதவீதமாகக் குறைக்க பிரான்ஸ் விமான போக்குவரத்துத் துறை அறிவுறுத்தியுள்ளது.
விமான ஊழியர்கள் தங்கள் ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வேலை நிறுத்தம் மேற்கொண்டு வருவதை அடுத்து அங்கு விமானப் போக்குவரத்து பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளது.
Patrikai.com official YouTube Channel